Sexual Harassment File Pic (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 07, நிர்மல் (Telangana News): தெலங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில், பாலியல் வன்முறையால் ஆத்திரமடைந்த 60 வயது மாமியார், குடிபோதையில் மீண்டும் பலாத்காரம் செய்ய முயன்ற தன் 45 வயது மருமகனை கட்டையால் அடித்துக் கொன்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம், ஹிமாயத் நகரைச் சேர்ந்த ஷேக் நசீம் (வயது 45) என்பவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தன் மனைவி, மகன் மற்றும் மாமியாருடன் தெலங்கானாவுக்கு வந்துள்ளார். நிர்மல் மாவட்டத்தின் தரோடா கிராமத்தில் வசித்து வந்த நசீம், கூலி வேலை செய்து வந்தபோதிலும், மதுப் பழக்கத்துக்கு அடிமையானார். Honor Killing: காதல் மனைவி கண்முன்னே வாலிபர் சுட்டுக்கொலை.. கலப்பு திருமணத்தால் நேர்ந்த கொடூரம்..!

மருமகன் படுகொலை:

சமீபத்தில், நசீமின் மனைவி மற்றும் மகன் மஹாராஷ்டிராவில் உள்ள ஷிவானிக்குச் சென்றிருந்தனர். கடந்த வாரம், குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த நசீம், உறங்கிக்கொண்டிருந்த தன் மாமியாரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்தார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாமியார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சமீபத்தில்தான் வீடு திரும்பியிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 05) மீண்டும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த நசீம், மாமியாரிடம் மறுபடியும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றார். கடந்த வாரத்தில் நிகழ்ந்த சம்பவத்தால் ஏற்பட்ட உடல் மற்றும் மன வலியோடு இருந்த மாமியார் ஆத்திரமடைந்தார். இதனால் அருகில் கிடந்த ஒரு கட்டையை எடுத்து, தன் மருமகன் ஷேக் நசீமை சரமாரியாக தாக்கினார். தலையில் பலத்த காயம் அடைந்த நசீம், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மாமியார் கைது:

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மருமகனை கொலை செய்த மாமியாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், குடி மற்றும் போதைப் பழக்கத்தினால் நிகழும் விபரீத விளைவுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. மாமியார் மருமகனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3