ஜூலை 15, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், லக்னோவை சேர்ந்தவர் ரோஷ்னி கான். இவர் தனது கணவர் ஷாருக்கானை பிரிந்து, காதலன் உதித் ஜெய்ஸ்வாலுடன் லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் இருந்தார். ஷாருக் குழந்தையை தன்னுடன் வைத்திருக்க விரும்பினார். இதற்காக, அவர் நீதிமன்றம் செல்லத் தயாராக இருந்தார். ஆனால், ரோஷ்னி மகளை அவரிடம் கொடுக்க விரும்பவில்லை. வீட்டில் தனியாக இருந்த சிறுமி கூட்டு பலாத்காரம்.. நண்பர் உட்பட 4 பேர் வெறிச்செயல்..!
மகள் கொலை:
இந்நிலையில், ரோஷ்னி தனது மகளை கழுத்தை நெரித்துக் கொன்று (Murder), தனது கணவர் தான் மகளை கொலை செய்தார் என காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விசாரணையில், ரோஷ்னி காவல்துறையினரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், தான் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையில், கழுத்தை நெரித்து கொலை செய்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதன் பின்னர், அவரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.