Rat (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 16, மும்பை (Mumbai): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை (Bandra, Mumbai), பாந்த்ரா பகுதியை சேர்ந்த நபர், தனியார் வங்கியில் உயரிய பொறுப்பில் வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று அங்குள்ள பஞ்சாபி ரெஸ்டாரண்டில் (Panjabi Restaurant) உணவு சாப்பிட சென்றுள்ளார்.

அவர் இரவு உணவை ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருந்த நிலையில், உணவு அவருக்கு பரிமாறப்பட்டுள்ளது. அதனை ஆவலோடு எடுத்து சாப்பிட்டு இருக்கிறார். இந்நிலையில், அவரது உணவில் குட்டி எலி (Died Baby Rat on Food) இறந்து கிடந்துள்ளது.

இதனைக்கண்டு அதிர்ந்துபோன வங்கிப்பணியாளர், உணவக நிர்வாகத்திடம் முறையிட்டபோது சரியான பதில் இல்லை. இதனையடுத்து, அவர் தகுந்த ஆதாரங்களை அங்கேயே திரட்டி, பாந்திரா காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். 98 years old Freedom Fighter: சுதந்திர தினம் கொண்டாடிய 98 வயது சுதந்திரப் போராட்டத் தியாகி: மக்கள் நெகிழ்ச்சி.! 

புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், உணவில் எலி இறந்து கிடந்தது உறுதியானது. இதனையடுத்து, உணவகத்தின் மேலாளர், சமையலர் உட்பட 3 பேரை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

கோழி இறைச்சியாக இருக்கும் என நினைத்து குழம்பை எடுத்து ஊற்றியவருக்கு குட்டி எலி இறந்து கிடந்து அதிர்ச்சியை தந்துள்ளது. இதனை சாப்பிட்டதால் வங்கிப்பணியாளர் மருத்துவ சிகிச்சையையும் பெறவேண்டிய நிலை ஏற்பட்டது.