Mumbai High Court Divorce Case (Photo Credit : @DivyaHimachal X)

ஜூலை 19, மும்பை (Mumbai News): மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் வசித்து வரும் நபருக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. ஒன்றாக வசித்து வந்த தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2015 ஆம் ஆண்டு பெண்ணின் கணவர் விவாகரத்து கேட்டு புனே மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார். இந்த மனுவில் மனைவி தன்னை சித்திரவதை செய்வதாகவும் கூறியிருந்தார். நீதிபதிகள் கணவருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டனர்.

பெண் விவாகரத்து வேண்டாம் என கோரிக்கை:

இந்நிலையில், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற எதிர்ப்பு தெரிவித்த மனைவி, மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கணவரின் பெற்றோர் என்னை கொடுமைப்படுத்தி வருகிறார்கள், நான் எனது கணவரை நேசிக்கிறேன், அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன் என பெண் கூறியுள்ளார். இந்த காலம் கனியும் வரை எனக்கு கணவர் பராமரிப்புத் தொகையாக மாதம் ரூ.1 லட்சம் தர வேண்டும் எனவும் கூறியிருந்தார். காவலர் குடும்பம் இப்படி செய்யலாமா? வரதட்சணை கொடுமை.. பெண் ஆசிரியை ஐசியூ-வில் பரிதவிப்பு‌.! 

மனைவி சந்தேகம்:

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் அமர்வில், கணவர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. அதில் எனது மனைவி உறவு கொள்ள மறுக்கிறார். நான் வேறு சில பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் சந்தேகப்படுகிறார். குடும்பத்தினர், நண்பர்கள், ஊழியர்கள் முன் என்னை அவமதிக்கிறார். இந்த சித்திரவதைகளை செய்துவிட்டு அவரே என்னை கைவிட்டு, அவரின் பெற்றோர் வீட்டுக்கு சென்றார் எனக் கூறியுள்ளார்‌.

நீதிபதிகள் உத்தரவு:

இரு தரப்பு வாதங்களையும் ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், பெண்ணின் முறையீடு மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், புனே நீதிமன்றத்தின் உத்தரவையும் அவர்கள் அங்கீகரித்தனர். இது தொடர்பாக தெரிவித்த நீதிபதிகள், "மனைவி கணவருடன் உறவுக்கு மறுப்பது, சந்தேகப்படுவது சித்ரவதையாக கருத முடியும். அவமானம் விளைவிப்பது கணவருக்கு அல்லது துணைக்கு இழைக்கும் கொடுமை என தெரிவித்த நீதிபதிகள், மனைவியின் முறையிடை ரத்து செய்து உத்தரவிட்டனர்.