Pocso Act (Photo Credit: @BarBench Twitter)

மே 04, மும்பை (Maharashtra News): கடந்த 2019ம் ஆண்டு சிறார்களுக்கு எதிராக நாடாகும் குற்றச்செயல்களை தடுக்க, போக்ஸோ சட்டத்தின் சரத்துகள் மேலும் கடுமையாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இன்றளவில் காதல் என்பது சிறு வயதுள்ள குழந்தைகளுக்கும் திரைமோகத்தால் ஏற்பட்டு, அவர்கள் தங்களின் நிலை அறியாமல் தனிமையில் சந்திக்கின்றனர். இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரும் பட்சத்தில், அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர்.

அங்கு சிறுமி மைனராக இருப்பதால், அவரை காதலித்து நெருங்கிய இளைஞருக்கு எதிராக கடத்தல் மற்றும் சிறார் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்படுகிறார். இதற்கிடையில், இவ்வாறான காதல் விருப்ப உறவுகளுக்கு போக்ஸோ சட்டம் பொருந்தாது என அவ்வப்போது மாநில உயர்நீதிமன்றங்கள் சில வழக்குகளில் தீர்ப்பளித்து வருகின்றன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் வசித்து வரும் பதின்ம வயது சிறுமி, கடந்த 2021ல் 21 வயது இளைஞருடன் ஏற்பட்ட பழக்கத்தால் தனிமையில் நெருங்கி பழகி இருக்கிறார். ஒருகட்டத்தில் அவருடன் சிறுமி விரும்பி சென்றுவிட்டதாக தெரியவருகிறது. இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், 2021 பிப்ரவரி மாதம் இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமி மீட்கப்பட்டார். இளைஞனின் மீது போக்ஸோ சட்டம் பதிவு செய்யப்பட்டது. Manobala Death Reason: சிகிரெட் பழக்கத்தால் பிரிந்த உயிர்; மனோபாலா மரணத்திற்கு முக்கிய காரணம் இதுதான்.!

தற்போது இளைஞர் தனக்கு ஜாமின் கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், விசாரணை நடைபெற்று வந்தது. நேற்று நீதிபதி அனுஜா பிரபுதேசாய் அமர்வில் விசாரணைக்கு வந்த வழக்கில், இளைஞருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டது. அப்போது பேசிய நீதிபதி, "விசாரணையின் போது சிறுமி காதல் வயப்பட்டு விருப்பப்பட்டு இளைஞருடன் சென்று இருக்கிறார். இவை எப்படி போக்ஸோ சட்டத்தின் கீழ் வரும்?.

போக்ஸோ சட்டம் பாலியல் குற்றத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதே ஆகும். இவை காதல் அல்லது விருப்பட்ட உறவுகளுக்கு பொருந்தாது. அதன் வாயிலாக சிறார்களை தண்டிக்க இயலாது. வழக்கு விசாரணையின் போது சிறுமியின் தாய் மகளும் - எதிர்தரப்பு மனுதாரரும் விருப்பப்பட்டு சென்றது உறுதியாகிறது. போக்ஸோ சட்டம் இவ்வகை காதல் - விருப்ப உறவுகளுக்கு பொருந்தாது. அவர்களை குற்றவாளிகளை போல முத்திரை பதிக்க வேண்டாம். சிறுமியும் தனது காதலரோடு விருப்பட்டு சென்றதாக தெரிவித்து இருக்கிறார். இதன் வாயிலாக இளைஞருக்கு ஜாமின் வழங்கப்படுகிறது" என கூறினார்.