Nigerian Escaped from Police Custody (Photo Credit: Twitter)

அக்டோபர் 07, நவிமும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான நிகழ்வுகள் அதிகளவு நடைபெற்று வருகின்றன. நைஜீரியா உட்பட வெளிநாடுகளில் இருந்து வரும் கும்பல், போதைப்பொருட்களை இந்தியாவில் சட்டவிரோதமாக ஊடுருவ செய்கிறது.

இவ்வாறான சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து, உளவுத்துறையின் தகவலின் பேரில் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலை அதிகாரிகள் தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்தாலும், புற்றீசல் போல உருவாகும் இக்கும்பலின் செயல்பாடுகள் குறையவில்லை. Coimbatore News: தொட்டி நீரில் மூழ்கி 6 வயது சிறுவன் பரிதாப பலி: கட்டுமான தொழிலாளர்களின் அலட்சியத்தால் நடந்த சோகம்.! 

இந்தியாவில் போதைப்பொருள் குற்றத்தில் சிக்கி, நமது குற்றம் உறுதியாகும் பட்சத்தில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனையும், ரூ.1 இலட்சம் முதல் ரூ.10 இலட்சம் வரை சிறை தண்டனையும் கிடைக்கும்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவிமும்பை காவல் துறையினர், நைஜீரிய நாட்டை சேர்ந்தவரை போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக கைது செய்துள்ளனர். அவரை விசாரணைக்காக தனியார் விடுதிக்கு அழைத்து வந்துள்ளனர்.

விசாரணை முடிந்து தரைதளத்திற்கு வந்தவரை வாகனத்தில் ஏற்றும் முயற்சியில் அதிகாரிகள் எடுப்பட்டிருந்த நிலையில், அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பிய நைஜீரியர், கண்ணிமைக்கும் நேரத்தில் ஓட்டம் பிடித்தார். அவரை பிடிக்க அதிகாரிகள் முயற்சித்தும் பலனில்லை.

இதனால் தற்போது தலைமறைவாகியுள்ள அவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.