![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/10/Died-Child-Death-File-Pic-Photo-Credit-Source-Pixabay-380x214.jpg)
அக்டோபர் 07, கோவை (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேடப்பட்டி சாலை, நாகராஜபுரம், அன்னை சத்யா நகரில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி உள்ளார். தம்பதிகளுக்கு 6 வயதுடைய குகன்ராஜ் என்ற மகனும் இருக்கிறார்.
சிறுவன் குகன்ராஜ் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். நேற்று சிறுவன் வீட்டில் இருந்த நிலையில், மதியம் தனது தாயாரிடம் விளையாடச்செல்வதாக கூறி, வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்திருக்கிறார்.
இந்நிலையில், மாலை வெகுநேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாத நிலையில், அதிர்ந்துபோன பெற்றோர் சிறுவனை தேடி பார்த்துள்ளனர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இவர்களின் வீடு அருகில் ஆரம்பப்பள்ளி சுற்றுச்சுவர் கட்டுமான பணிகளும் நடைபெற்று வந்துள்ளன. Leo Trailer Release: அனல் பறக்கும் “லியோ” பட ட்ரெய்லர்: டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் அலறவிடும் லுக்.!
இப்பணிக்காக தற்காலிக தண்ணீர் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டு இருந்த நிலையில், தொட்டியில் சிறுவன் மூழ்கி சடலமாக கிடப்பதாக அப்பகுதி மக்களிடையே தகவல் பரவி இருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் அங்கு திரண்டனர். சிறுவனின் பெற்றோரும் நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.
அங்கு தனது மகன் தண்ணீர் தொட்டியில் கிடப்பதை கண்டு அதிர்ந்துபோன பெற்றோர், சிறுவனை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர்.
மகனின் இறப்பை அறிந்த பெற்றோர் மருத்துவமனை வளாகத்திலேயே கதறியழுதது, அங்கிருந்தோரை சோகத்திற்கு உள்ளாக்கியது. கட்டுமான பணியில் இருந்த தொழிலாளர்கள், தண்ணீர் தொட்டியை சரியாக மூடாமல் சென்றதே மரணத்திற்கு காரணம் என சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறுகின்றனர்.
அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திடீர் போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து, தகவல் அறிந்த பேரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டியன், தொண்டாமுத்தூர் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். Noyyal River Kovai:கோவை நொய்யல் ஆற்றை பராமரிக்க புதிய திட்டம்.!: நடந்தாய் வாழி காவிரி.!
சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கவும் முயற்சி செய்தனர். முதலில் உறவினர்கள் கடும் கொந்தளிப்புடன் இருந்ததால், தீர்வு எட்டப்படவில்லை. பரபரப்பு சூழல் அதிகரிக்கும் விதமாக, உறவினர்களும் குவிந்ததால் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். பின், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியும் அளித்தனர்.
இதனால் சிறுவனின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சிறுவனின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அபுபக்கர் (வயது 19), மாலிக் குஷ்தூர் (வயது 29), ஷேக் ஆஸ்குத் (வயது 25), அசாருத்துள் இஸ்லாம் (வயது 30) ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது.