ஜனவரி 19, புதுடெல்லி (New Delhi): புதுடெல்லியில் உள்ள பிதம்புரா (Delhi Pitampura Fire Accident) பகுதியில் உள்ள இரண்டு மாடிகள் கொண்ட குடியிருப்பில், இரண்டாவது மாடியில் உள்ள வீட்டில் தொழிலதிபர் சுபாஷ் குப்தா என்பவர் தனது குடும்பத்தினருடன் தங்கியிருக்கிறார். நேற்று இரவு நேரத்தில் இவர்களின் வீட்டில் இருந்து கரும்புகை தென்படவே, இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தில் சிக்கி பலி: நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தீ அதிகாரிகள் வருவதற்குள் வீடு முழுவதும் பரவி எரியத்தொடங்கியுள்ளது. நீண்ட போராட்டத்திற்கு பின்னர், 8 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், வீட்டிற்குள் இருந்த 3 பெண்கள் உட்பட 5 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. Shocking News: சென்னை மக்களுக்கு அதிர்ச்சி செய்தி.. 2 நாட்களுக்கு குடிநீர் வராது..!
பலியானோரின் விபரம் சேகரிப்பு: எஞ்சிய 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களின் வீட்டில் தீப்பற்றியது எப்படி? என்ன நடந்தது? உயிரிழந்தவர்கள் யாவர்? என விசாரணை தொடர்ந்து நடக்கிறது. டெல்லி உட்பட வடமாநிலங்களில் தற்போது குளிர்காலம் என்பதால், மக்கள் அங்கு கடுமையான குளிரை எதிர்கொண்டு இருக்கின்றனர்.
தொடரும் உயிரிழப்புகள்: இதனால் வீட்டிற்குள்ளேயே குளிர்காய நெருப்புகளை மூட்டி வருகின்றனர். சில குடும்பம் தீ மூட்டியபடி உறங்கி, கரும்புகை சூழ்ந்து மூச்சுத்திணறி பலியாகி இருக்கிறது. இதற்கிடையில், தொழிலதிபரின் குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் பலியாகி இருக்கின்றனர்.