IND Vs PAK Asia Cup 2025: மாஸ் வெற்றி! இந்தியா - பாகிஸ்தான் ஆசியக்கோப்பை 2025 போட்டியில் அசத்தல்.! மாயாஜாலம் செய்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்.!

துபாயில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை 2025 (Asia Cup 2025) தொடரில், இன்றைய ஆட்டத்தில் இந்திய தேசிய கிரிக்கெட் அணி - பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி (Indian National Cricket Team Vs Pakistan National Cricket Team) சமமான திறனை வெளிப்படுத்தின. இந்தியா Vs பாகிஸ்தான் (India Vs Pakistan Cricket) இறுதியில் இந்திய அணி வெற்றி அடைந்தது.

IND Vs PAK Asia Cup 2025: மாஸ் வெற்றி! இந்தியா - பாகிஸ்தான் ஆசியக்கோப்பை 2025 போட்டியில் அசத்தல்.! மாயாஜாலம் செய்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்.!
IND Vs PAK Cricket Asia Cup 2025 (Photo Credit: @BCCI X)

செப்டம்பர் 21, துபாய் (Sports News): ஆசியக்கோப்பை 2025 (Asia Cup 2025) தொடரில், இந்தியா உட்பட 8 நாடுகள் கிரிக்கெட் விளையாட்டில் மோதிக்கொள்கின்றன. இந்த போட்டி நடப்பு ஆண்டில் துபாயில் நடைபெற்று வருகிறது. 19 போட்டிகள் கொண்ட ஆட்டத்தில், இன்று 14வது ஆட்டம் நடைபெறுகிறது. கடந்த செப்டம்பர் 14ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் (India - Pakistan Cricket Match) இடையே நடைபெற்ற போட்டியில், இறுதியில் இந்திய தேசிய கிரிக்கெட் அணி திரில் வெற்றி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, இன்று இரண்டாவது முறையாக நடப்பு தொடரில் இந்தியா Vs பாகிஸ்தான் அணிகள் (India Vs Pakistan Cricket) மோதிக்கொள்கின்றன. இதனால் இந்த ஆட்டத்திலும் இந்தியாவின் வெற்றி ரசிகர்களால் எதிர்பாக்கப்படுகிறது. H1B Visa Fees: எச்1பி விசா கட்டணம் உயர்வு.. இந்தியர்களுக்கு பேரிடி! டிரம்ப் அதிரடி! முழு விபரம் இதோ.! 

இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Pakistan National Cricket Team):

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பேட்டிங் செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் சார்பில் விளையாடிய சாஹிபிசாடா பர்ஹான் 45 பந்துகளில் 58 ரன்கள் விளாசி அசத்தினார். 5 பவுண்டரி, 3 சிக்ஸர் என பாகிஸ்தான் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். பாக்கர் ஜாமான் 9 பந்துகளில் 15 ரன்கள், சயாம் அயூப் 17 பந்துகளில் 21 ரன்கள், ஹுசைன் தலட் 11 பந்துகளில் 10 ரன்கள், முகம்மத் நவாஸ் 19 பந்துகளில் 21 ரன்கள், சல்மான் ஆகா 13 பந்துகளில் 17 ரன்கள், பஹீம் அஸ்ரப் 8 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தனர். முந்தைய ஆட்டத்தில் தோல்வியடைந்த வருத்தத்தில் இருந்த பாகிஸ்தான், தற்போது அசத்தல் திறனை வெளிப்படுத்தி இருந்தது. பந்துவீச்சை பொறுத்தவரையில், இந்திய அணியின் வீரர் ஷிவம் டியூப் 2 விக்கெட் கைப்பற்றினார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்திருந்தது. Solar Eclipse 2025: 2025ம் ஆண்டுக்கான சூரிய கிரகணம்.. இந்தியாவில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் இதோ.! 

India Vs Pakistan Cricket (Photo Credit: Instagram)
India Vs Pakistan Cricket (Photo Credit: Instagram)

இந்தியா எதிர் பாகிஸ்தான் சரிசமமான போட்டி (India Vs Pakistan Asia Cup 2025 Cricket Match):

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி அதிரடி & நிதானத்துடன் ரன்கள் குவிப்பில் ஈடுபட்டது. இந்திய அணியின் சார்பில் முதலில் களமிறங்கிய அபிஷேக் ஷர்மா (Abhishek Sharma) பந்துகளில் ரன்கள் குவித்திருந்தார். ஷுப்மன் கில் 27 பந்துகளில் 47 ரன்கள் விளாசி அசத்தி இருந்தார். இருவரும் சேர்ந்து 100 ரன்களுக்கு மேல் குவித்தது மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்றது. இவர்கள் இருவரும் சேர்ந்து 9.4 ஓவர் வரையில் எந்த விக்கெட்டையும் இழக்காமல் 105 ரன்கள் சேகரித்தனர். மூன்றாவதாக அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் களமிறங்கி இருந்தார். அவர் 3 பந்துகளில் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஹாரிஸ் ரவுபின் பந்தில் அப்ரார் அகமத்திடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். பின் திலக் வர்மா களமிறங்கினார். இந்திய அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டை இழந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

IND Vs PAK Cricket Asia Cup 2025 (Photo Credit: @BCCI X / @ESPICric X)
IND Vs PAK Cricket Asia Cup 2025 (Photo Credit: @BCCI X / @ESPICric X)

இந்திய அணி திரில் வெற்றி:

இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பீதிக்கு உள்ளாகிப்போயினர். களத்தில் திலக் வர்மா, சஞ்சு சாம்சன் நின்று ஆடி ரன்களை நிதானமாக உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் சஞ்சு சாம்சன் 17 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஹாரிஸின் பந்துகளில் போல்ட் அவுட் ஆகினார். இந்திய அணி 4 விக்கெட் இழந்து இருந்தது. திலக் வர்மா 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தனர். ஹர்திக் பாண்டியா 7 பந்துகளில் 7 ரன்கள் எடுத்தனர். இறுதியில் இந்திய கிரிக்கெட் அணி 18.5 வது ஓவரில்174 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மீண்டும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

நவாஸின் விக்கெட் எடுத்த தருணம்:

சூப்பர்மேன் கில்லா? ஷுப்மன் கில்லா?

அபிஷேக் ஷர்மாவின் அதிரடி ஆட்டம்:

(The above story first appeared on LatestLY on Sep 21, 2025 11:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).