Haridwar Murder Case (Photo Credit : @Republic_Bharat X / Pixabay)

ஜூலை 08, உத்தரகாண்ட் (Uttarakhand News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சீதாபூர் பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் (வயது 28). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஹன்சிகா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரிதுவார் சிட்குல் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளனர். நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தவர்கள் ஹரிதுவாரில் தனியாக வீடு ஒன்றை எடுத்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்துள்ளனர். இதனிடையே பிரதீப்பிற்கு ஹன்சிகாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. Trending Video: மெட்ரோவில் ஆபாச நடனமாடிய பெண்.. ரீல்ஸ் பெயரில் அநாகரீகம்.! 

நடத்தை சந்தேகத்தால் தகராறு :

இதனால் அவர் வேறொரு நபருடன் பேசுவதாக நினைத்து காதலியுடன் அடிக்கடி தகராறும் செய்து வந்துள்ளார். இதன் காரணமாக ஹன்சிகா பிரதீப்பிடம் பேசுவதை நிறுத்தியதை தொடர்ந்து, இன்று மதியம் அவர் தனியே நடந்து சென்றபோது ஹன்சிகாவிடம் பிரதீப் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வாக்குவாதமானது முற்றிய நிலையில், தான் வைத்திருந்த கத்தியால் காதலியை கழுத்தறுத்து கொன்றார். இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ஹன்சிகா உயிரிழந்தார்.

துடிதுடிக்க பறிபோன உயிர் :

இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஹன்சிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காதலன் பிரதீப் ஹன்சிகாவை கழுத்தறுத்துக் கொன்றது உறுதியானதால் போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து தலைமறைவான பிரதீப்புக்கு வலை வீசியுள்ளனர்.