PM Modi President Putin Meets 2024 (Photo Credit: @NarendraModi X)

ஜூலை 09, நோவோ-ஒகரயேவோ (World News): இந்திய பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறை பொறுப்பேற்ற நரேந்திர மோடி (PM Narendra Modi), 2 நாள் அரசுமுறை பயணமாக ரஷியா சென்றுள்ளார். நேற்று காலை 11 மணியளவில் டெல்லியில் இருந்து ரஷியா (Russia) புறப்பட்டு சென்ற பிரதமருக்கு, மாஸ்கோவில் சிகப்புக்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, நேற்று ரஷிய அதிபர் விளாடிமிர் (President Vladimir Putin) புதினை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்தார்

ராஜாங்க பேச்சுவார்த்தை:

பிரதமர் நரேந்திர மோடியை அன்புடன் வரவேற்ற ரஷிய அதிபர், ஆரத்தழுவி தனது அன்பை வெளிப்படுத்தினார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியும், தனது கூட்டாளியான ரஷிய அதிபரை "அன்புள்ள நண்பரே" என்று புன்முறுவலுடன் சந்தித்து பேசினார். சில நிமிடங்கள் உரையாடிக்கொண்ட தலைவர்கள், அடுத்தடுத்து தங்களின் பயண விபரங்களுடன் விடைபெற்றனர். இன்று இருநாட்டு அதிபர்களும் ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர். Jammu Kashmir Terror Attack: ஜம்மு காஷ்மீரில் மீண்டும் நடந்த கொடூரம்; 5 இராணுவ வீரர்கள் பலி., பாதுகாப்புத்துறை அமைச்சர் வேதனை.! 

பொருளாதார தடையிலும் மாஸ் காண்பிக்கும் ரஷியா:

பிரதமர் மோடியின் ரஷிய பயணம் உலக நாடுகளால் கவனிக்கப்படுகிறது. ஏனெனில் ரஷியா - உக்ரைன் போருக்கு பின், அமெரிக்கா ரஷியாவுக்கு எதிரான தனது பனிப்போருக்கு சரியான தீனி போடும் விதமாக பொருளாதார தடைகளை விதித்தது. ஆனால், ஐரோப்பிய யூனியனின் எண்ணெய், எரிவாயு தேவை, இந்தியாவின் நட்புறவில் மலரும் வணிகம் என ரஷியா தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. ரஷியா தொடர்ந்து வடகொரியா, சீனா ஆகிய நாடுகளிடமும் புதிய நட்புறவை மெருகூட்டுகிறது. இதனால் பிரதமர் நரேந்திர மோடியின் ரஷிய பயணம் என்பது கவனிக்கப்படுகிறது.

அதேபோல, பிரதமரின் பயணம் தொடங்கும் முன்பு, இந்தியாவுக்கு ரஷியா வழங்கவேண்டிய 45,000 நவீன ரக துப்பாக்கிகளையும் இந்திய இராணுவத்திடம் ஒப்படைத்தது.

மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர்:

பிரதமர் நரேந்திர மோடி - ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சந்திப்பு காணொளி: