Assam Floods (Photo Credit: @yuvnique X)

மே 31, இம்பால் நகரம் (Manipur News): வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ரீமால் புயலாக மாறி வங்கதேச நாடு - இந்தியாவின் மேற்குவங்கம் மாநிலம் இடையே கரையை கடந்தது. இதனால் தொடர் மழை-வெள்ளத்தை அப்பகுதிகள் எதிர்கொண்டன. கரையை கடந்து சென்ற புயல் மணிப்பூர் மற்றும் அசாம் மாநில எல்லைப்பகுதிக்குள் சென்று வலுவிழந்தது. இதனால் அங்குள்ள பகுதிகளில் திடீர் மழை பெய்தது. Samosa Shop Cylinder Blast: சமோசா கடையில் சிலிண்டர் தீப்பிடித்து வெடித்து விபத்து; நெல்லையில் பகீர்., பதறவைக்கும் காட்சிகள் உள்ளே.! 

குழந்தையை மீட்ட அதிகாரிகள்: அதிக மழையை தொடர்ந்து, அங்குள்ள பல ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்தது. ஒருகட்டத்தில் மணிப்பூர் மாநிலத்தில் (Assam Floods) உள்ள இம்பால் நகரம் வெள்ளத்தின் பிடியில் சிக்கிகொண்ட நிலையில், அங்குள்ள ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளின் மேல்தளங்களில் தஞ்சம் புகுந்தனர். தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் அனைவரும் மீட்பு படையினர் உதவியுடன் மீட்கப்பட்டு, பத்திரமான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இம்பால் நகரின் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து, அசாம் ரைபிள் (Assam Rifles) படையினர் மீட்பு பணிகளில் களமிறங்கியுள்ளனர். அச்சமயம், அவர்கள் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்றை, அன்னக்கூடை போன்ற பாத்திரத்தில் வைத்து பத்திரமாக மிதந்தபடி உள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளன.