Visakhapatnam Train Fire (Photo Credit: @RealBharatMedia X)

ஆகஸ்ட் 04, விசாகப்பட்டினம் (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் இரயில் நிலையத்தின் நான்காவது நடைமேடையில், விசாகப்பட்டினம் - கோர்பா (Korba - Visakhapatnam Express) விரைவு இரயில் நின்றுகொண்டு இருந்தது. அச்சமயம் ஏ1, பி6 மற்றும் பி7 ஆகிய பெட்டிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. Demolition Of Bakery With Bulldozer: 12 வயது சிறுமி பலாத்காரம்; குற்றவாளிக்கு ஆப்படித்த மாநில அரசு.. விவரம் இதோ..!

மீட்பு பணிகள் தீவிரம்:

இதனையடுத்து, உடனடியாக பயணிகள் இரயிலில் இருந்து இறக்கப்பட்ட நிலையில், இரயில்வே அதிகாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நல்வாய்ப்பாக பயணிகள் யாரும் தற்போது வரை காயமடையவில்லை. இரயில் தனது நிறுத்தத்திற்கு வந்த சில நொடிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோர்பாவில் இருந்து விசாகப்பட்டினம் வரை இயங்கும் இரயில், அங்கிருந்து திருப்பதிக்கு செல்லும். இன்று காலை விசாகப்பட்டினம் வந்த இரயில், திருப்பதி நோக்கி சில நிமிடங்கள் இடைவெளிக்கு பின்னர் புறப்பட தயாராக இருந்தது. அப்போதுதான் தீ விபத்து சம்பவம் நடந்துள்ளது. திருப்பதி வரை பயணம் செய்ய காத்திருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இரயில் தீப்பிடித்த காட்சிகள்:

விசாகப்பட்டினம் இரயில் நிலையத்தில் தீ விபத்து: