ஜூன் 15, அம்ரேலி (Gujarat News): குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரேலி (Amreli Toddler Girl Died After Fallen into 50 feet Borewell) மாவட்டம், சூரக்பரா கிராமத்தில் உள்ள விவசாய நிலையத்தில், விவசாய கூலிகளாக தம்பதிகள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதுடைய ஆரோஹி என்ற மகள் இருக்கிறார். சிறுமி இன்று வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்தார்.
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி:
அவரின் பெற்றோர் சில அடிகள் தொலைவில் விவசாய நிலத்தில் வேலைபார்த்துக்கொண்டு இருந்தனர். இதனிடையே, அங்கு கைவிடப்பட்டு இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள், சிறுமி தவறி விழுந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், பதறியபடி மகளை மீட்க முயற்சித்தும் பலனில்லை. இதனால் உடனடியாக காவல் துறையினர் மற்றும் அவசர ஊர்தி குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. Phone Number Fee: இனி போன் நம்பருக்கும் கட்டணமா.? டிராய் சொன்ன விளக்கம்..!
தகவலை அறிந்த அதிகாரிகள், தேசிய மற்றும் மாநில மீட்பு படையினர், தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த அதிகாரிகள், பொக்லைன் உட்பட ராட்சத இயந்திரங்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், சிறுமிக்கு தேவையான ஆக்சிஜன் விநியோகமும் ஆழ்துளை கிணற்றுக்குள் வழங்கப்பட்டது.
45 அடி ஆழத்தில் சிக்கி சோகம்:
நேற்று மாலை சிறுமி 45 - 50 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த நிலையில், கிட்டத்தட்ட 8 மணிநேரம் நடந்த தொடர் போராட்டத்தின் முடிவாக சிறுமி மீட்கப்பட்டார். ஆனால், அவர் அதற்குள் பரிதாபமாக உயிரிழந்துபோனார். காலை 5 மணிக்கு மேல் சிறுமி மீட்கப்பட்ட நிலையில், அவரின் உடல் உயிரற்று மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மகளை பறிகொடுத்த துயரத்தில் பெற்றோர் கண்ணீர் துயரத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றை சரிவர மூடாமல் அலட்சியமாக இருந்த நிலத்தின் உரிமையாளருக்கு எதிராக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து இருக்கின்றனர்.
#WATCH | Gujarat: A girl fell into a 45-50 feet deep borewell in Surgapara village, Amreli, NDRF team is at the spot and rescue operation is underway. https://t.co/XZEGg7RSTZ pic.twitter.com/qwBQCBUceZ
— ANI (@ANI) June 14, 2024