ஜனவரி 08, கட்ச் (Gujarat News): குஜராத் (Gujarat) மாநிலத்தில் உள்ள கட்ச் மாவட்டம், புஸ் தாலுகா கந்தேரி கிராமத்தில் வசித்து வரும் 22 வயதுடைய இளம்பெண், சம்பவத்தன்று 540 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் (Borewell Death) தவறி விழுந்துள்ளார். இவர் 490 அடியாளத்தில் சிக்கிக்கொண்ட நிலையில், இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
பரிதாபமாக பறிபோன உயிர்:
இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், சுமார் 33 மணி நேரம் போராடி ஆழ்துளை கிணற்றில் இருந்த பெண்ணை மீட்டனர். நேற்று மாலை 4 மணியளவில் அவர் மீட்கப்பட்டு உடனடியாக புஜ்ஜில் இருக்கும் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி ஒரு சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்தார். V Narayanan: இஸ்ரோ தலைவராக குமரியை பூர்வீகமாக வி.நாராயணன் நியமனம்.. மத்திய அரசு அறிவிப்பு.!
புலம்பெயர் தொழிலாளர் குடும்பம்:
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், புலம்பெயர் தொழிலாளர்களின் மகளான 22 வயது இளம்பெண், தாய்-தந்தையுடன் ராஜஸ்தானில் இருந்து குஜராத்துக்கு வேலை காரணமாக இடம் பெயர்ந்துள்ளார். வேலைக்கு வந்த இடத்தில் இந்த சோகம் நடந்தது தெரியவந்துள்ளது.
33 மணிநேரம் போராடி பிரிந்த உயிர்:
உயிரிழந்த பெண்மணி இந்திரா மீனா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சமயத்தில், அவருக்கு உடலில் பல இடங்களில் காயமும் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 33 மணி நேரம் அவர் உயிருக்கு போராடி இறந்துள்ளார். ஆழ்துளை கிணற்றில் பெண் தவறி விழுந்த நிலையில், அவரின் அலறல் சத்தம் கேட்டு, பின் மீனா ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளதை உறுதி செய்து இருக்கின்றனர்.