மே 04, சூரத் (Gujarat News): குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் மாவட்டம் (Minor Girl Raped by Lover), பாதேனா பகுதியில் பெண்மணி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதுடைய மகள் இருக்கிறார். பெண்மணி அங்குள்ள துணி உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் வேலைபார்த்து வந்த நிலையில், அவ்வப்போது வீட்டில் இருக்கும் தனது மகளையும் நிறுவனத்திற்கு அழைத்து வந்துள்ளார். அச்சமயம், சிறுமியுடன் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் தொழிலாளியான ஜீது ராணா (வயது 21) என்பவர் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். ஒருகட்டத்தில் சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய இளைஞர், அவரை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி வேலை பார்த்து வந்த நிறுவனத்தின் கிட்டங்கி பகுதியில் வைத்து பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். India National Elections 2024 Rangoli Design Videos: இந்தியத்தேர்தல்கள் 2024: ரங்கோலியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அசத்தும் தேர்தல் ஆணையம்.! 

திருட்டுத்தனமாக பதிவு செய்யப்பட்ட வீடியோவால் அம்பலமான உண்மை: திருமண ஆசை வார்தையின்பேரில் சர்ச்சை செயல் அவ்வப்போது அரங்கேறி இருக்கிறது. இதனை அந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் 45 வயதுடைய பாபு சவுதாரி என்பவர் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டுள்ளார். இதனை வைத்து அவர் சிறுமியை மிரட்டவும் தொடங்கி இருக்கிறார். ஒருகட்டத்தில் சிறுமியின் மீது மோகம் கொண்ட சௌதாரி, சிறுமியின் உறவினர் ஒருவரிடம் அந்த வீடியோவை காண்பித்து இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், சிறுமியின் தாயாருக்கு உடனடியாக தகவலை தெரியப்படுத்தி இருக்கிறார். பெண்மணி மகளிடம் உண்மையை கேட்டறிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார். புகாரை ஏற்ற காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து சிறுமியை சீரழித்த ஜீத்து, இதனை காட்சிப்படுத்திய சௌதாரி ஆகியோரை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.