ஜனவரி 25, பெங்களூர் (Bangalore): கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர்வில் உள்ள, ஹூலிமவு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினியர் தனது மனைவி மற்றும் 12 வயது மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அந்த சாப்ட்வேர் எஞ்சனியர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.
மேலும் அவரின் 7ம் வகுப்பு மாணவி வீட்டில் இருந்தபடியே பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்து வருகிறார். இந்த நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் அவர்களது மகள் மிகவும் விரைவாக எழுந்துள்ளார். அதைக்கண்ட அவரது தாய் ஏன் இவ்வளவு விரைவாக எழுந்துவிட்டாய் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த சிறுமி மழுப்பலான பதிலை கூறியுள்ளார். பின்னர், அந்த சிறுமி தனது அறைக்கு சென்றுள்ளார். Cop Dragging Girl Protester: பெண்ணை பிடிக்க தலைமுடியை இழுத்து கீழே தள்ளிய காவலர்கள்; அதிர்ச்சியூட்டும் சம்பவம்.!
பின்னர், காலை 5 மணியளவில் திடீரென சத்தம் ஒன்று கேட்டுள்ளது. அதைக்கேட்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாவலர் சென்று பார்த்துள்ளார். அப்போது 29 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை, அந்த சிறுமி ரத்தவெள்ளத்தில் தரையில் கிடந்துள்ளார். உடனடியாக அந்த காவலர் அனைவருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து வந்த அந்த சிறுமியின் பெற்றோர்கள் தங்களது மகள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.
தொடர்ந்து, அந்த சிறுமியை மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றனர். ஆனால், சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு காவலர்கள் விரைந்துள்ளனர். மேலும் முதல் கட்ட விசாரணையில் சிறுமி சமீப நாட்களாகவே மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. 12 வயது சிறுமி மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.