Carrot Coconut Laddu (Photo Credit: YouTube)

ஏப்ரல் 18, சென்னை (Kitchen Tips): குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் இனிப்பு வகைகளில், லட்டு என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். அந்த வகையில் கேரட் மற்றும் தேங்காய் வைத்து எப்படி லட்டு செய்து சாப்பிடுவது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

கேரட் - 4

தேங்காய் (துருவியது) - 1 கப்

சர்க்கரை - 300 கிராம்

பால் பவுடர் - 250 கிராம்

ஏலக்காய்த்தூள், மெலன் சீட்ஸ் - தலா ஒன்றரை தேக்கரண்டி

நெய் - 1 தேக்கரண்டி. Volcanic Eruption: இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறல்; சுனாமி எச்சரிக்கை..!

செய்முறை:

முதலில் கேரட்டை சுத்தம் செய்து அதனை துருவி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நெய் ஊற்றி, துருவிய கேரட் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறிவிடவும். கேரட் வெந்தபிறகு அதில், துருவிய தேங்காயை சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்பு அதோடு, பால் பவுடர் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும். இவைகள் சற்று கெட்டியாக வந்ததும், அதில் மெலன் சீட்ஸ் சேர்த்து கிளறிவிட்டு இறக்கிவிடவும். சிறிது நேரம் ஆற வைத்து பின்பு இதனை லட்டுக்களாக உருண்டை பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான கேரட் தேங்காய் லட்டு ரெடி.