Wayanad Landslides CCTV Video (Photo Credit: @RTVnewsnetwork X)

ஆகஸ்ட் 19, வயநாடு (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டம் (Wayanad), அட்டமலை, சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் கடந்த 30 ஜூலை 2024 அன்று மிகப்பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 3 கிராமங்களில் இருந்த வீடுகள், கடைகள், பாதைகள் என கிராமமே உருகுலைந்துபோன நிலையில் வெள்ளம்-நிலச்சரிவில் சிக்கி 56 குழந்தைகள் உட்பட 406 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான உடல் அடையாளம் காணப்படாத வகையில் துண்டு-துண்டாக கிடந்தது. இவை அனைத்தும் டிஎன்ஏ ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய உடல்கள் அங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளில் ஒன்றாக நல்லடக்கம் செய்யப்பட்டது. Kolkata Doctor Rape & Murder Case: 2 மணிநேரத்திற்கு ஒருமுறை மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு அப்டேட்; மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.! 

மீட்பு பணிகளில் களமிறக்கப்பட்ட இராணுவம்:

இந்திய இராணுவம் உட்பட முப்படை, மீட்பு படையினர் இணைந்து களத்தில் ஒன்றாக பணியாற்றினர். வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மக்களின் இயல்பு வாழ்க்கை அங்கு படிப்படியாக திரும்பி வருகிறது. கடந்த 2019 தென்மேற்கு பருவமழைக்குப் பின்னர், 2024ல் கேரளாவில் மிகப்பெரிய துயரம் நடந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சூரல்மலை பகுதியில் உள்ள நென்மேனி கிராமத்தில் நில அதிர்வு உணரப்பட்டதாகவும் கூறப்பட்டது.

புதிய சிசிடிவி காட்சிகள் வைரல்:

இந்நிலையில், சூரல்மலை பகுதியில் இருக்கும் வீடு ஒன்றில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளில் பதிவான அதிர்ச்சி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அந்த காணொளியில், வெள்ளம் திடீரென கரைபுரண்டு வீடுகளுக்குள் உருண்டு ஓடத்தொடங்கிய சில நொடிகளில், பெரிய அளவிலான பாறைகள் வீடுகளை சேதப்படுத்தி இடித்து அகற்றி சென்றது தெரியவந்துள்ளது.