Snake Capture Girl Sarpmitra Shitalkasar (Photo Credit: Instagram)

மே 04, அஹில்யா நகர் (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமத் நகர் மாவட்டம், அஹில்யா நகர் பகுதியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் பெண்மணி சிட்டு என்ற ஷர்ப்மித்ரா ஷிடல்கரா (Sarpmitra Sitalkasar). இவர் அப்பகுதியில் பாம்பு பிடிக்கும் பெண்மணியாகவும், இன்ஸ்டாகிராம் பிரியராகவும் வலம்வருகிறார். யூடியூப் சேனலும் வைத்து நடத்தி வருகிறார். அவ்வப்போது தான் பிடிக்கும் பாம்புகள் குறித்த வீடியோவை அவர் வெளியிடுவது வழக்கம்.

கழிவறைக்குள் புகுந்த பாம்பு (Girl Captured Snake From Toilet): இந்நிலையில், கடந்த ஏப்ரல் 6ம் தேதி அங்குள்ள பகுதியில் வீட்டு ஒன்றில் விஷத்தன்மை இல்லாத பாம்பு கழிவறைக்குள் புகுந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ந்துபோன குடும்பத்தினர் உடனடியாக பெண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் விரைந்து வந்த பெண்மணி, விசமில்லாத பாம்பு கழிவறைக்குள் இருப்பதை உறுதி செய்தார். 6 College Students Died: பள்ளத்தில் உருண்டு பயங்கர விபத்தில் சிக்கிய கார்; கல்லூரி மாணவர்கள் 6 பேர் பரிதாப பலி.! 

விஷத்தன்மை இல்லாத பாம்பு: பின் பாம்பை இலாவகமாக பிடித்து கையில் தூக்கி வந்த பெண்மணி, எந்த விதமான சலனமும் இன்றி அதனை தான் கொண்டு வந்த கைப்பைக்குள் போட்டு பத்திரமாக வனப்பகுதியில் விட்டார். பெண் பாம்பை கைகளால் தூக்கி வருவதை கண்ட அப்பகுதி மக்கள், பாம்பு என்ற ஐயத்தில் முகத்தில் வித்தியாசமான பாவனையையும் வெளிப்படுத்தி இருந்தனர். சிட்டு பிடித்த பாம்பு நீரில் வாழும் பாம்பு ஆகும். விஷத்தன்மை இல்லாத பாம்பு எலி, தவளை ஆகியவற்றை பிடித்து சாப்பிட்டு உயிர்வாழும் என தெரிவித்தார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Shittu💎𓆗 (@sarpmitra_shitalkasar_official)