ஜூலை 24, தானே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தை சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு திருமணம் முடிந்து கணவர், 2 மற்றும் 5 வயதுடைய குழந்தைகள் இருக்கின்றனர். கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக, தம்பதிகள் இருவரும் சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். குழந்தை 25 வயது தாயின் பராமரிப்பில் இருந்து வருகிறது. இவர் தனது தாயாரின் வீட்டில் வசித்து வருகிறார்.
கர்ப்பமானதால் திருமணத்திற்கு கோரிக்கை:
இதனிடையே, கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த பெண்ணுக்கு, கஜேந்திர தகட்கைரே என்ற நபருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் தனிமையில் அவ்வப்போது சந்தித்து வந்துள்ளனர். இதன் விளைவாக 25 வயது பெண்மணி கர்ப்பமாகி இருக்கிறார். இதனால் தன்னை திருமணம் செய்யுமாறு தகட்கைரேவிடம் பெண்மணி கோரிக்கை வைத்துள்ளார். Teacher Arrest: பள்ளி மாணவிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது..!
ஆற்றில் வீசப்பட்ட பெண்ணின் உடல்:
இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த கயவன், கருக்கலைப்பு செய்யலாம் என பெண்ணை மூளைச்சலவை செய்து தன்னுடன் மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளார். அங்கு சட்டவிரோதமாக செய்யப்பட்ட கருக்கலைப்பு காரணமாக பெண் உயிரிழந்ததாக தெரியவருகிறது. இதனால் அவரின் சடலத்தை காரில் ஏற்றிய தகட்கைரே, தனது நண்பர் ரவிகாந்த் கைக்கவாட் உதவியுடன் இந்திரயாணி ஆற்றுப்பகுதிக்கு வந்துள்ளார்.
குழந்தைகளுக்கும் நேர்ந்த சோகம்:
அங்கு 25 வயது பெண்ணின் குழந்தைகள் இருவரும் தாய் பேச்சு மூச்சின்றி இருப்பதை பார்த்து அழுதுகொண்டு இருக்க, ஆட்கள் இல்லாத பகுதியில் கயவர்கள் இருவரும் சேர்ந்து பெண் மற்றும் அவரின் 2 குழந்தைகளை ஆற்றில் வீசி இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் ஏற்கனவே உயிரிழந்த பெண் மற்றும் அவரின் 2 குழந்தைகள் நீருடன் அடித்து செல்லப்பட்டனர். கடந்த ஜூலை 09ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. Teenager Misbehaved With Young Girl: தனியாக நடந்து சென்ற இளம்பெண்ணிடம் அத்துமீறல்; வாலிபருக்கு அடி, உதை..!
காவல்துறையினர் விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலம்:
இதற்குப்பின் தனது மகளுக்கு தொடர்புகொண்ட தாய், அவரிடம் பேச இயலாத காரணத்தால் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கஜேந்திரனை சந்தேகத்தின் பேரில் கைது செய்த காவல்துறையினர், அவரின் செல்போன் வாயிலாக பயணம் மேற்கொண்ட இடங்களின் விபரத்தை சேகரித்தனர்.
2 பேர் கைது:
பின் தங்களின் பாணியில் நடந்த விசாரணையில், கயவன் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த அதிர்ச்சி உண்மையை அறிந்த காவல் துறையினர், கஜேந்திரன் மற்றும் அவரின் நண்பர் கைக்வாட் ஆகியோரை கைது செய்தனர். மேலும், பெண், 2 குழந்தைகளின் சடலத்தை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீதிமன்றம் ஜூலை 30ம் தேதி வரை குற்றவாளிகளிடம் மேற்படி விசாரணை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.