ஏப்ரல் 30, சத்தீஸ்கர் (Chhattisgarh News): சத்தீஸ்கர் மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதிகளில் நக்சலைட்டுகளின் (Naxalites) ஆதிக்கம் ஆனது தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. அவர்கள் ஊருக்குள் புகுந்து கிராம மக்களை தாக்குதல் நடத்துவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. இதனால், நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள, நாராயணன்பூரி (Narayanpur district), கன்கேர் மாவட்ட எல்லையில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கு சென்றனர். International Jazz Day 2024: "கண்கள் அறியா காட்சி.. நாசி நுகரா நறுமணம்.. இதழ் அறியா சுவை.. செவிக்கு மட்டும் வரம்.." சர்வதேச ஜாஸ் தினம்..!
அப்போது நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 பெண்கள் உள்பட 7 நக்சலைட்டுகளை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். மேலும் அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் நக்சலைட்டுகள் வேட்டை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.