Jammu Kashmir Doda Encounter: ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை.. ராணுவ அதிகாரி வீரமரணம்..!
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் ராணுவ கேப்டன் வீர மரணம் அடைந்தார்.
ஆகஸ்ட் 14, புதுடெல்லி (New Delhi): ஜம்மு காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக பாதுகாப்புப் படையினரை இலக்கு வைத்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தோடா மாவட்டத்தில் ஷிவ்கர்க்-அஸார் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு உளவுத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து பயங்கரவாதிகளை அழிப்பதற்காக "Op ASSAR" என்ற பெயரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. Youngsters Dangerous Stunt Video: முத்திப்போன ரீல்ஸ் மோகம்.. லைக்குக்காக உயிரைப் பணயம் வைக்கும் நண்பர்கள்..!
அதன்படி தோடா மாவட்ட வனப்பகுதியில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கேப்டன் தீபக் சிங் உயிரிழந்தார். துப்பாக்கிச் சண்டையில் பொதுமக்களில் ஒருவரும் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
(The above story first appeared on LatestLY on Aug 14, 2024 06:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

