அக்டோபர் 07, புதுடெல்லி (New Delhi): மாலத்தீவு (Maldives President) நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றியடைந்து, அந்நாட்டின் அதிபராக பொறுப்பேற்ற முகம்மது முய்சு (Mohamed Muizzu), இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று நேரில் சந்தித்தார். அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு வந்த முய்சுவுக்கு, இந்திய பரம்பரியபடி உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இன்று டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி - மாலத்தீவு அதிபர் முய்சு ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
திரும்ப பெறப்பட்ட இந்திய இராணுவம்:
சுற்றுலாவை மட்டும் பிரதானமாக நம்பி இருக்கும் மாலத்தீவு, முன்னதாக இந்திய இராணுவத்தின் படைத்தளத்தை கொண்டு இருந்தது. இதனால் இந்தியர்கள் பலரும் மாலத்தீவுக்கு சென்று இருந்தனர். இதனிடையே, கடந்த தேர்தலுக்கு முன்னதாக இந்திய அரசுடன் மாலத்தீவு அரசை சேர்ந்தோர் மோதல் போக்கை நீடித்து வந்தனர். சீனாவுடன் நெருக்கம் காண்பித்து இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களையும் முன்வைத்தனர். இந்தியர்களுக்கு எதிராக போரட்டம் நடந்ததால், அங்கிருந்து இராணுவம் திரும்ப பெறப்பட்டது. 11-Year-Old Girl Dies: தந்தையுடன் டிராக்டரில் பயணிக்க ஆசைப்பட்ட சிறுமிக்கு காத்திருந்த எமன்; அலட்சியத்தால் நடந்த சோகம்.!
இந்தியா - மாலத்தீவு உறவு:
இதனிடையே, தற்போது மிகப்பெரிய அளவிலான பொருளாதார சிக்கலில் தவித்து வரும் மாலத்தீவு இந்தியாவின் உதவியை நாடியுள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். ராஜாங்க ரீதியாக இந்தியாவின் பாதுகாப்பு கருதி மாலத்தீவில் தனது துருப்புகளை நிலைநிறுத்த இந்தியாவும் முயற்சிப்பதால், இந்தியா - மாலத்தீவு உறவுகள் புதிய வளர்ச்சிப்பாதையில் செல்லவுள்ளது.
இந்தியாவுக்கு ஒத்துழைக்க உறுதி:
மேலும், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த மாலத்தீவு அதிபர் முய்சு, "இந்தியா எண்களின் நட்பு நாடு, நெருங்கிய எங்களின் கூட்டாளியுடன் நாங்கள் ஒத்துழைப்பாக இருப்போம். இராணுவ நடவடிக்கைக்கும் ஒத்துழைத்து இந்தியாவுடன் நட்பாக இருப்போம்" என பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாலத்தீவு அதிபர் - இந்திய பிரதமர் சந்தித்துக்கொண்ட காட்சிகள்:
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi receives Maldives President Mohamed Muizzu at Hyderabad House. The two leaders are holding a meeting here.
(Video: DD News) pic.twitter.com/P3oE9MVRay
— ANI (@ANI) October 7, 2024