Long queues at petrol pumps (Photo Credit: @ANI X)

ஜனவரி 02, மகாராஷ்டிரா (Maharashtra): சமீபத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு புதிய சட்டங்கள் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதிலும் மூன்று வாகன சட்டங்கள் அமலாக்கப்பட்டன. இந்த சட்டத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்திருந்தார். குறிப்பாக, சாலை விபத்துக்களை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடும் டிரைவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் திருத்தம் (New hit-and-run law) செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ஐபிசி 304 ஏ படி அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை மட்டுமே சிறை தண்டனை விதிக்க முடியும். ஆனால் தற்போது 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்க சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. Man Dies Of Burns: நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை.. 7 மணி நேரத்தில் இருவர் கைது..!

வெடித்த போராட்டம்: இதற்கு ஓட்டுனர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக வட இந்தியாவில் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிலும் மகாராஷ்டிராவில் லாரி ஓட்டுனர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நவி மும்பையில் பெங்களூரு – மும்பை சாலையில் குறைந்தது 400 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல ராய்கார்ட் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் நாக்பூரில் உள்ள பெட்ரோல் பம்புகளில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தால் மக்கள் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளனர்.