ஜூலை 09, கத்துவா (Jammu Kashmir News): ஜம்மு காஷ்மீரில் சமீபகாலமாக பயங்கரவாதிகளின் ஊடுருவல் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்திய இராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள், ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் அதனை முறியடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். எனினும், இந்தியாவில் வாழ்ந்துகொண்டு பாக். ஆதரவு பிரிவினைவாத எண்ணத்துடன் செயல்படும் தேசத்துரோகிகள், பாகிஸ்தானிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
சமீபத்தில் நடந்த தாக்குதல்:
இதனை இந்திய அரசு இராணுவத்தின் உதவியுடன் எதிர்கொண்டு வரும் நிலையில், அவ்வப்போது பயங்கரவாத தாக்குதலும் தொடருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குல்காம் (Kulgam Terror Attack) பகுதியில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 6 ஹிஜ்புல் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட 2 இந்திய இராணுவ அதிகாரிகள் வீர மரணம் அடைந்தனர். இந்நிலையில், தற்போது மீண்டும் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது. Brain Eating Amoeba: மூக்கு வழியாக நுழைந்து மூளையை தாக்கும் அமீபா.. தமிழக அரசின் அறிவிப்பு..!
5 இராணுவ வீரர்கள் வீரமரணம்:
அங்குள்ள கத்துவா (Kathua Terror Attack) பகுதியில் சாலையில் இராணுவ வாகனத்தில் பயணம் செய்த இந்திய இராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 5 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த விஷயம் இந்திய அளவில் மீண்டும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ள நிலையில், பயங்கரவாதிகளை தேடி வேட்டையாட இராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முழு அளவிலான பணியில் இறங்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக பதன்கோட் மற்றும் பிளல்வ்ர் இராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் வேதனை:
இதனிடையே, இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாந் சிங், தனது சமூக வலைதளப்பக்கத்தில், "கதுவாவி பத்னோட்டாவில் பயங்கரவாத தாக்குதலில் வீரம் கொண்ட இந்திய இராணுவ வீரர்கள் ஐந்து பேரை இழந்துள்ளோம். இதனால் நான் மிகவும் வேதனைப்படுகிறேன். SC On Menstrual Leave: மாதவிடாய் கால விடுப்பு.. உச்ச நீதிமன்றம் சொன்ன பதில்..!
அவரை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த கடினமான நேரத்தில் தேசம் அவர்களுடன் உறுதியாக நிற்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இந்திய இராணுவம் மற்றும் பாதுகாப்புப்படை வீரர்கள் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஒழுங்கை ஏற்படுத்துவதில் உறுதியாக உள்ளனர். இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்." என தெரிவித்துள்ளார்.
I am deeply anguished at the loss of five of our brave Indian Army Soldiers in a terrorist attack in Badnota, Kathua (J&K).
My deepest condolences to the bereaved families, the Nation stands firm with them in this difficult time. The Counter Terrorist operations are underway,…
— Rajnath Singh (@rajnathsingh) July 9, 2024