ஜூலை 28, சென்னை (Health Tips Tamil): தினமும் காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளும் டீ குடிப்பது பலருக்கும் பிடித்த ஒன்றாக இன்றுவரை இருக்கிறது. மழை பெய்தால், வெயில் அடித்தால், குளிர்ந்தால், தலை வலித்தால் என ஒவ்வொரு காரணம் வைத்து சிலர் 4 முறைக்கும் மேல் டீ குடிப்பதும் இருந்து வருகிறது. டீ குடிப்பது மட்டுமின்றி அதற்கு நொறுக்கு தீனியாக பன், பிரட், ரஸ்க், பிஸ்கட் உள்ளிட்டவற்றையும் எடுத்துக்கொள்கின்றனர்.
காலை உணவை தவிர்க்கும் மக்கள் :
காலை எழுந்தவுடன் டீயுடன் ரஸ்க் அல்லது பிஸ்கட் சாப்பிடுவதால் வயிறு நிரம்பியது போன்று தோன்றும். இதனால் சிலர் காலை உணவை தவிர்க்கவும் செய்கின்றனர். இது உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சிலர் டீக்கடைகளில் டீ குடிக்கும்போது வடை, பஜ்ஜி, சமோசா, போண்டா உள்ளிட்டவற்றையும் நொறுக்கு தீனிகளாக எடுத்துக்கொள்வர். Aadi Pooram 2025: திருமண தடை நீங்க.. குழந்தை பாக்கியம் பெற அம்பாளுக்கு வளையல் மாலை.. அம்மன் வழிபாட்டிற்கு உகந்த நேரம்.!
தவிர்க்கவேண்டிய உணவுகள் :
நாம் டீ, காபி ஆகியவற்றை குடிக்கும் போது அதனுடன் எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. அப்படி உண்பதால் வயிற்றில் அமிலத்தின் அளவு அதிகரிக்கிறது. இதனால் அஜீரண கோளாறு ஏற்படும். மேலும் இரும்பு சத்துக்கள் நிறைந்த பச்சை காய்கறிகள், ஆல்கஹால், சாக்லேட், ஐஸ்கிரீம், புதினா போன்றவற்றையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
மருத்துவ வல்லுநர்களின் எச்சரிக்கை :
சமீபகாலமாகவே வேலைப்பளு காரணமாக பலரும் அதிக அளவில் டீ எடுத்துக்கொள்கின்றனர். இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. உடலுக்கு தேவையான வைட்டமின் பி12, இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம், புரோட்டின், ஃபைபர் உள்ளிட்டவற்றை காய்கறிகள், கீரைகள் அதிகம் உண்பதன் மூலம் எடுத்துக்கொள்ள இயலும். அப்படி எடுத்துக்கொள்ளாத பட்சத்தில் அல்சர், எலும்புச்சத்து குறைபாடு போன்றவை ஏற்படும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.