Olive oil (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 21, சென்னை (Chennai News): முடி பராமரிப்பிலும் வளர்ச்சி மற்றும் கருமைக்கும் எண்ணெய்யைத் தலையில் தேய்து மசாஜ் செய்வது முடிக்கு நல்ல பலனை தரும். ஆனால் பலரும் தலைமுடியை முறையாக எண்ணெய் தேய்த்து பராமரிக்காமல் இருப்பதால் அடர்த்தியின்மை, முடி உதிர்வு, முடி பிளவுபடுதல் ஏற்படுகிறது.

கூந்தலுக்கு நன்மை பயக்கும் ஐந்து எசன்ஸியல் எண்ணெய்கள்

லாவண்டர் எசன்ஸியல் எண்ணெய்:

தேங்காய் எண்ணெயுடன் 2 - 3 சொட்டு லாவண்டர் எசன்ஸ் ஆயிலை சேர்க்க வேண்டும். இதை தலையில் தேய்த்து ஊறவிட வேண்டும். இரவு முழுவதும் தேய்க்கலாம் அல்லது ஒரு மணி நேரத்திற்கு பிறகு முடியை அலச வேண்டும். நல்ல ரிசல்ட்டிற்கு ஷாம்பு அல்லது கண்டிஷனர் பயன்படுத்துகையில் சில துளிகளை அதில் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

லாவண்டர் எண்ணெய் முடி உதிர்தலைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வைக்கிறது. மேலும் இது வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. இது தலையில் இரத்தவோட்டத்தையும் அதிகரித்து முடியி வேர்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. மேலும் நரம்புகளை அமைதிப்படுத்துகிறது. Hair Serum: அசுர வேகத்தில் முடி வளர உதவும் ஹேர் சீரம்.. கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.!

Ylang Ylang எசன்ஸியல் எண்ணெய்:

2-3 துளிகள் Ylang Ylang எசன்ஸ் எண்ணெயை, வழக்கமாகப் பயன்படுத்தும் ஷாம்பூவில் சேர்த்து தலைக்கு குளிக்கலாம். இந்த எசன்ஸ் ஆயிலை சில துளிகள் தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலைக்கு மசாஜ் செய்து வரலாம். இது பேன், பொடுகு தொல்லைகளையும் குணப்படுத்தும். ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீரில் ஊற்றி அதில் சில துளிகள் Ylang Ylang எசன்ஸ் எண்ணெயை ஊற்றி கலக்கி வைக்க வேண்டும். முடிகளுக்கு கூடுதல் பளபளப்பைச் சேர்க்க இந்தக் பிரேவை தலைக்குளித்துவிட்டு வந்த பின் லேசாக ஸ்பிரே செய்து கொள்ளலாம்.

இது இயற்கை கண்டிஷனிங்காக செயல்படுகிறது. இந்த ய்லாங் ய்லாங் எசன்ஸ் வேரிகாலின் செயல்திறனை அதிகப்படுத்தி முடியை வேகமாக வளரச்செய்கிறது. மேலும் பிளவுகள் ஏற்படாமலும் தடுக்கிறது.

ரோஸ்மேரி எசன்ஸ் ஆயில்:

கூந்தலின் அடர்த்தியை அதிகரிக்க ரோஸ்மேரி ஆயில் மிகவும் பயன்னுள்ளதாக இருக்கும். 3 - 5 துளிகள் ரோஸ்மேரி எண்ணெயை ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெயுடன் கலந்து முடியின் வேர்களில் தடவ வேண்டும். சுமார் 20 நிமிடத்திற்கு பின் தலையை அலச வேண்டும். இந்த எண்ணெயை உங்கள் ஷாம்பு, கண்டிஷனர்களில் 2 சொட்டுகள் விட்டும் வழக்கமான முறையில் பயன்படுத்தலாம்.

இது தலையில் இரத்தவோட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இந்த ஆயில் பல்வேறு முடி வளர்ச்சி சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஊட்டசத்தில்லாத முடிகளுக்கு சத்தை அளித்து அடர்த்தியாகவும் பிளவில்லாமலும் வளர வைக்கிறது.

சிடார்வுட் எசன்ஸியல் ஆயில்:

இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், உச்சந்தலையில் உள்ள எண்ணெய் சுரப்பிகளை சமநிலைப்படுத்துவதன் மூலமும் முடி உதிர்தலைக் குறைக்கிறது. இதன் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு, பொடுகை கட்டுப்படுத்தவும் உதவும். இது முடி இடையில் உதிர்வதை குறைத்து முடியை அடர்த்தியாக்குகிறது.சிடார்வுட் எசன்ஸ் எண்ணெய் நல்ல தலையை உள்ளிருந்து ரிலாக்ஸாகவும் வைக்கிறது.

2 டேபிள் ஸ்பூன் எசன்ஸை, வழக்கமாக பயன்படுத்தும் எண்ணெயுடன் சில துளிகள் சேர்க்க வேண்டும். அதை உச்சந்தலையில் அனைத்து இடங்களுக்கு செல்லுமாறு மெதுவாக 2 நிமிடத்திற்கு மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊறவிட்ட பின் அலச வேண்டும். 2-3 சொட்டு லாவெண்டர் ஆயில், தைம், ரோஸ்மேரி மற்றும் சிடார்வுட் சம அளவு சேர்த்து தலையில் மசாஜ் செய்து வந்தால் முடி வளர்ச்சி அதிகமாக இருப்பதை நாமே உணரலாம்.

தேயிலை எசன்ஸியல் ஆயில்:

தேயிலை எசன்ஸ் எண்ணெயை சில துளிகள் ஷாம்பு மற்றும் கண்டிஷனரில் கலந்து வழக்கமான முடிக்கு பயன்படுத்தலாம். ரெகுலராக பயன்படுத்ட்தும் எண்ணெயில், இந்த எசன்ஸை 2-3 சொட்டுகள் கலந்து தலையில் மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்களுக்கு பின் தலையை நன்கு அலசிக் கொள்ளலாம். தேயிலை எசன்ஸ் ஆயில் வேர்கால்களுக்கு ஊட்டமளித்து, ஊக்கப்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. இது பொடுகு மற்றும் அரிப்பு போன்றவற்றை குறைக்கிறது.

நல்ல ரிசட்டிற்கு எசன்ஸ் ஆயில்களை முடிகளுக்கு அடிக்கடி பயன்படுத்த வேண்டும். இவைகள் சேதமடைந்த முடிகளுக்கு ஊட்டமளித்து ஆரோக்கியத்தை விரைவில் மேம்படுத்துகின்றன.