Marriage | Instagram Logo File Pic (Photo Credit: Pixabay | Wikipedia)

மே 21, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள மடிவாளா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். அவர் கல்லூரி ஒன்றில் பி.காம் 2-ஆம் ஆண்டு பயின்று வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி அன்று வீட்டை விட்டு சென்ற மாணவி, திரும்பி வரவில்லை. இதன்காரணமாக, மாணவியின் தாய் இதுகுறித்து மடிவாளா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், காவல்துறையினர் மாணவியை தேடி வந்தநிலையில், அவரை பற்றிய எந்தவித தகவலும் கிடைக்கப்பெறவில்லை. National Anti-Terrorism Day 2024: ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள்.. தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம்..!

இதனையடுத்து, தனது மகளை மீட்டு தருமாறு கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை ஐகோர்ட் நீதிபதி முன்னிலையில் நடந்தது. இதனிடையே, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கேரளாவை சேர்ந்த வாலிபருக்கும் இவருக்கும் இன்ஸ்டாகிராம் (Instagram Love) மூலம் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளது தெரியவந்தது. மேலும், அந்த வாலிபர் துபாயில் வேலை பார்த்து வந்துள்ளார். வாலிபர் அங்கிருந்து கேரளாவிற்கு வந்ததும், கடந்த ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி அன்று இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு, கேரளாவில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அந்த இளம்பெண்ணை பெங்களூருக்கு கூட்டி வந்து, ஐகோர்ட் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர், இருதரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாணவியிடம் தனியாகவும் விசாரணை மேற்கொண்டார். முடிவில், தான் எனது காதல் கணவருடன் செல்ல விரும்புவதாகவும், தனக்கு 18 வயது பூர்த்தி ஆகி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து, நீதிபதி இதற்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்தார். மேலும், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.