டிசம்பர் 31, டெல்லி (Delhi News): 2024-ம் ஆண்டு வெளிநாட்டுப் பயணங்கள் முதல் அயோத்தி ராமர் கோவில் வரை பிரதமர் நரேந்திர மோடி பல புதிய சாதனைகள் படைத்துள்ளார்.
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள்:
- பிரதமர் மோடி 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் கயானா மற்றும் நைஜீரியா சென்றார் பிரதமர் மோடி.
- 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உக்ரைனுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார்.
- 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் போலந்து நாட்டுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டிருந்தார்.
- 2024-ம் ஆண்டு ஆஸ்திரியாவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். அதிலும் புருனே தாருஸ்ஸலாம் சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி.
- பிரதமர் மோடி அண்மையில் குவைத் பயணம் மேற்கொண்டார். Richest CM: இந்திய முதலமைச்சர்களில் பணக்காரர்கள் யார்? சந்திரபாபு நாயுடு முதல் ஸ்டாலின் வரை.. விபரம் உள்ளே..!
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட உயரிய விருதுகள்:
பூடான் பயணத்தின்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான 'ஆர்டர் ஆஃப் தி ட்ரூக் கியால்போ', ,ஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்ட போது, டொமினிகா நாட்டின் விருது, கயானாவுக்கு பயணம் மேற்கொண்ட போது டொமினிக குடியரசின் அதிபர் ஜனாதிபதி சில்வானி பர்ட்டனால் விருது, நைஜீரியா சென்ற போது, 'தி கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர்' விருது, கயானா நாட்டுக்குச் சென்ற போது, 'தி ஆர்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்' விருது, பார்படாஸின் கௌரவ ஆர்டர் ஆஃப் ஃப்ரீடம் ஆஃப் பார்படாஸ் விருது, குவைத் பயணத்தின் போது 'தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்' என்ற உயரிய விருது வழங்கப்பட்டது.
பிரதமர் மோடி திட்டங்கள்:
பிரதமர் மோடி அயோத்தி ராமர் சிலையினை திறந்து வைத்தார். மேலும் பிரதமர் மோடி பில்கேட்ஸை சந்தித்து, தொழில்நுட்பம், AI, டிஜிட்டல் மாற்றம், நிலைத்தன்மை குறித்து பேசினார். இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நமோ ட்ரோன் தீதிஸ் மூலம் விவசாய ஆளில்லா விமானம் இயக்குவதை பிரதமர் மோடி நேரில் பார்த்தார். தமிழகத்தின் கன்னியாகுமரியில் உள்ள சுவாமி விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் பிரதமர் மோடி தியானம் செய்தார்.