ஜனவரி 15, புதுடெல்லி (New Delhi): நாட்டின் மொத்த விலை பணவீக்கம் (Wholesale Price Inflation) ஆனது கடந்த நவம்பர் மாதத்தில் 0.26 சதவீதமாக அதிகரித்திருந்தது. இந்நிலையில் பண வீக்கம் ஆனது கடந்த டிசம்பர் மாதத்தில் 0.73 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. PM Condoles Urdu Poet Munawwar Rana: கவிஞர் முனவ்வர் ராணா மறைவு.. பிரதமர் மோடி இரங்கல்..!
மேலும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பணவீக்கம் மைனஸ் 0.52 சதவீதமாக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தான் பணவீக்கம் 1.41 சதவீதம் என சற்று அதிகமாக பதிவாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.