ஜனவரி 17, டெல்லி (Delhi): டெல்லியைச் சேர்ந்த சுனில் மன் என்கிற தில்லு தாஜ்பூரியா (Tillu Tajpuria) ஆள் கடத்தல், கொலை, மிரட்டிப் பணம் பறித்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர். கடந்த ஆண்டு தில்லு தாஜ்பூரியாயின் கூட்டாளிகளுக்கும் மற்றொரு பிரபல கேங்ஸ்டராக இருந்த ஜிதேந்தர் கோகி கூட்டாளிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் தனியாக சிக்கிய தில்லு தாஜ்பூரியாவை, ஜிதேந்தர் கோகியின் கூட்டாளிகளான யோகேஷ், தீபக் தீத்தர் ஆகியோர் இரும்புக்கம்பியால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து யோகேஷ் துண்டா (Yogesh Tunda) திகார் சிறையில் அடைக்கப்பட்டார். Heart Attack on Palm Tree Video: பனைமரம் ஏறிய நபருக்கு நெஞ்சுவலி... அவரின் உடலை மீட்கும் பரிதாப வீடியோ..!
திருமணத்திற்காக பரோல்: இந்நிலையில் யோகேஷ் என்பவரை திருமணத்திற்காக பரோலில் விடுவிக்கக் கோரி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு போடப்பட்டது. அந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, துண்டா சார்பில் ஆஜரான வக்கீல் வீரேந்தர் முயல், அவரது திருமணத்திற்காக ஆறு மணி நேர பரோலில் விடுவிக்க அனுமதி கோரினார். மேலும் திருமணத்திற்குப் பிறகு திருமண சம்பிரதாயங்கள் மற்றும் திருமண உரிமைகளுக்காக இடைக்கால ஜாமீன் வழங்கவும் அனுமதி கோரினார். இதனைத் தொடர்ந்து சிறப்பு நீதிபதி சந்திரஜித் சிங் டெல்லி காவல்துறை மற்றும் சிறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதன்படி இந்த வழக்கானது அடுத்த வாரம் விசாரணைக்கு வரும்.