Armodafinil Tablets (Photo Credit: @GeyzsoN X)

மார்ச் 13, டெஹ்ராடூன் (Uttarakhand News): உத்தரகாண்ட் மாநிலம், டெஹ்ராடூனின் (Dehradun) செலகி தொழில்துறை பகுதியில் தயாரிக்கப்பட்ட அர்மோடாஃபினில் மாத்திரைகளை உட்கொண்டதால் ஏற்பட்ட கடுமையான தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 2024 முதல் பிப்ரவரி 2025 வரை சிங்கப்பூரில் குறைந்தது 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் பதிவு செய்யப்படாத இந்த மருந்து, கெய்லாங் சுற்றுப்புறத்தில் உள்ள நோயாளிகளால் தெரு வியாபாரிகளிடம் இருந்து ஆற்றலை அதிகரிக்க பெறப்பட்டது என்று சிங்கப்பூரின் சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) தெரிவித்துள்ளது. Sunita Williams: பூமிக்கு திரும்புவதில் மீண்டும் சிக்கல்.. சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்.., நாசா விளக்கம்..!

9 பேர் பாதிப்பு:

சுகாதார அறிவியல் ஆணையம் கடந்த மார்ச் 10ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், மொடஃபினில், அர்மொடஃபினில் (Armodafinil) ஆகிய ஊக்கமருந்துகள் உள்ள பொருள்களை வாங்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது. பாதிக்கப்பட்ட 9 பேரில் 2 பெண்களும் அடங்குவர். அவர்கள் 18லிருந்து 57 வயதுக்கு உட்பட்டவர்கள். மொடஃபினில், அர்மொடஃபினில் ஆகியவை சிங்கப்பூரில் பதிவுசெய்யப்படாத ஊக்க மருந்துகள் ஆகும். இருப்பினும், நார்க்கோலெப்ஸி என்ற ஒருவகை தூக்க மயக்க நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சில நாடுகளில் மொடஃபினில், அர்மொடஃபினில் மாத்திரைகள் கொடுக்கப்படுவதாகச் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது.

சிறை தண்டனை:

சிங்கப்பூரில் (Singapore) அந்த மாத்திரைகளை உட்கொண்டோர் மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 9 பேரில் 6 பேர் ஸ்டீவன்ஸ்-ஜான்சன் எனும் தோல் நோய்க்கு ஆளாகினர். சுகாதார அறிவியல் ஆணையத்தின் அனுமதியின்றி மொடஃபினில், அர்மொடஃபினில் ஆகிய மாத்திரைகள் விற்ற குற்றம் நிரூபிக்கப்பட்டால் 50,000 வெள்ளி வரை அபராதம், 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இதுகுறித்த விவரங்களை மதிப்பாய்வு செய்த பிறகு நிர்வாகம் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று டேராடூன் மாவட்ட நீதிபதி சவின் பன்சால் தெரிவித்தார்.