ஏப்ரல் 25, புதுடெல்லி (New Delhi): அகில இந்திய அளவில் உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள், பொறியியல் கல்லூரிகளில் பிஇ மற்றும் பிடெக் படிக்க ஜெஇஇ (JEE Main Exam) எழுதவேண்டும். கடந்நத 2023ம் ஆண்டில், 2024ம் ஆண்டுக்கான ஜெஇஇ மெயின் தேர்வுகள் நடைபெற்று முடிந்தன. தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஜெஇஇ மெயின் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வுகள் இயக்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் கலந்துகொண்ட மாணவர்கள் jeemain.nta.ac.in என்ற இணையதளத்திற்கு சென்று (JEE Main Results 2024 Announced) தங்களின் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். தேர்வு எழுதிய மாணவர்களில் 56 பேர் 100 என்டிஏ புள்ளிகளை பெற்று சாதனையும் படைத்துள்ளனர். Ultraviolette F77 Mach 2 Launched In India: “நேரம் மறக்க தூரம் கடக்க என்னோட பைக்கே போதும்..” அல்ட்ராவைலட் எஃப்77 மேக் 2 இ-பைக் விற்பனைக்கு அறிமுகம்..!
தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வெழுதிய மாணவர்களில் முகுந்த் பிரதிஷ் எஸ் (240310072355), என் ஸ்ரீராம் (240310059329) ஆகியோர் 100% மதிப்பெண்கள் பெற்று இருக்கின்றனர்.
ஜெஇஇ தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளும் முறை:
- முதலில் jeemain.nta.ac.in என்ற இணையத்திற்கு செல்ல வேண்டும். அங்கு முடிவுகள் (Result) என்று இருக்கும் அமைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
- பின் அதில் கேட்கப்படும் விபரங்களை பூர்த்தி செய்து சரி என்பதை தேர்வு செய்தால், உங்களின் மதிப்பெண் கிடைக்கும். இதனை நாம் பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்.
National Testing Agency (NTA) declares results for JEE (Main) 2024 Session 2 (April)@NTA_Exams pic.twitter.com/g3HmdysgOG
— DD News (@DDNewslive) April 25, 2024