Odisha Bus Accident Visuals from Hospital (Photo Credit: ANI)

ஜூன் 26, கஞ்சம் (Ganjam) : ஒடிஷா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மாவட்டம் (Odisha), திகபஹண்டி பகுதியில் பயணம் செய்த தனியார் பேருந்து - ஒடிசா மாநில அரசு பேருந்து நேருக்கு (OSRTC Bus & Private Bus Collision) நேர் மோதி விபத்திறுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் பரிதாபமாக பலியாகினர்.

நள்ளிரவு 1 மணியளவில் பெர்ஹாம்பூர் பகுதியில் இருந்து வந்துகொண்டிருந்த தனியார் பேருந்தும், ராயகடா மாவட்டத்தில் உள்ள குடாரி பகுதியில் இருந்து வந்துகொண்டிருந்த ஒடிசா மாநில அரசு (OSRTC) பேருந்தும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தில் சிக்கியது.

விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள், 5 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அவசர ஊர்திகளுடன் விரைந்து துரிதமாக காயமடைந்து இருந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். Egypt – PM Modi In Al-Hakim Mosque: எகிப்து பயணத்தில் அல்-ஹக்கீம் மசூதிக்கு சென்று வழிபாடு செய்த பிரதமர் மோடி.!

உயிரிழந்தோரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு சென்று வந்த தனியார் பேருந்து விபத்திற்குள்ளானது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் 6 பேரின் உடல்நிலை மோசமாக இருப்பதால், அவர்களுக்கு MKCG மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ஓட்டுனரிடம் விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து இரங்கல் தெரிவித்த அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.3 இலட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார், காயமடைந்தோருக்கு இலவச சிகிச்சை வழங்கவும் உத்தரவிட்டு இருக்கிறார்.

விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை மாநில நிதி அமைச்சர் பிகாரம் கேசரி அருகா மற்றும் பெஹ்ராம்பூர் எம்.எல்.ஏ பிகாரம் பண்டா ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிலைமையை எடுத்துரைக்க நேரில் அனுப்பி வைத்துள்ளார்.