டிசம்பர் 25, புதுடெல்லி (New Delhi): சர்வதேச அளவில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களாக இருந்த கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், இன்போசிஸ், விப்ரோ உட்பட பல நிறுவனங்கள் முந்தைய மாதங்களில் பணி நீக்கங்களை அறிவித்தது ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருந்தது. இதனால் அந்நிறுவனங்களில் பணியாற்றி வந்த ஊழியர்களை கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
பணிநீக்கத்தில் பேடிஎம்: தற்போது பேடிஎம் (Paytm) நிறுவனம் தனது ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக கூறியுள்ளது. இதனால் பேடிஎம்-இல் பணியாற்றி வரும் ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில், 10 விழுக்காடு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அறிவிப்பு: இந்த ஆண்டில் இறுதியில் இது பாதிக்கப்பட்டோருக்கு பெரும் அதிர்ச்சியாகவும் அமைந்துள்ளது. தனது வணிக செயல்பாடுகளை சீரமைக்கவும், செலவுகளை குறைக்கவும் பணி நீக்க நடக்கவடிக்கையில் ஈடுபட்டதாக பேடிஎம் அறிவித்து இருக்கிறது. பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் விஜய் சேகர் சர்மா, தனது நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்து இருந்தார். Israel Hamas War: நிலத்தடி சுரங்கத்திற்குள் கொல்லப்பட்ட 5 இஸ்ரேலியர்கள் உடலை மீட்டது இராணுவம்; ஹமாஸ் பிடியில் சிக்கியவர்களுக்கு நடந்த சோகம்.!
ஆர்பிஐ கட்டுப்பாடுகள்: இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களில், மறுசீரமைப்பு பணிகள் தங்களது நிர்வாகம் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக பேடிஎம் தெரிவித்துள்ளது. ஆர்பிஐ விதித்த சில கட்டுப்பாடுகள் காரணமாக, நிறுவனத்தின் எதிர்காலம் தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் பணப்பரிவர்த்தனை: இணையவழி பணப்பரிமாற்றம் செய்யும் செயலிகளில் அதிக பயனர்களைக் கொண்ட பேடிஎம் நிறுவனம், 38 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு 4051 பணியாளர்களுடன் செயல்பட தொடங்கிய பேடிஎம் நிறுவனம், தற்போது 28 ஆயிரம் பணியாளர்களை கடந்து செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.