PM Narendra Modi | Parliament Session 2025 (Photo Credit: @ANI X)

பிப்ரவரி 04, புதுடெல்லி (New Delhi): இந்திய மக்களவை கூட்டத்தொடர் (Parliament Session 2025) 2025 - 2026 தொடங்கி நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவரின் உரையுடன் தொடங்கிய கூட்டத்தொடர், பட்ஜெட் தாக்கலால் (Union Budget 2025) விறுவிறுப்பு அடைந்தது. தனிநபர் வருமான வரி சட்டம் (Personal Income Tax TDS), புதிய வருமான வரி செலுத்தும் (New Income Tax Regime) சட்டம், வக்பு வாரியம் என 2025 மக்களவை கூட்டத்தொடர் தேசிய அளவில் கவனிக்கப்படுகிறது. இதனிடையே, இன்று குடியரசு தலைவரின் உரைக்கு பதில் அளிக்கும் தீர்மானத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஒருங்கிணைந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் முன்பு உரையாற்றினார்.

வறுமையில் இருந்து மீட்டது:

அப்போது, அவர் பேசுகையில், "பாஜக தலைமையிலான மத்தய அரசின் சாதனை, 21 ம் நூற்றாண்டின் பக்கத்தில் இடம்பெறும். இந்திய மக்களுக்கு பணியாற்றுவதை பெரும் பாக்கியமாக நான் அகராதி வருகிறேன். குடியரசுத்தலைவர் உரையில் எதிர்மறை கருத்துக்கள் முன்வைக்கப்ட்டுள்ளன. ஜனநாயகத்தில் கருத்துக்கள் முன்வைப்பது அவரவர் தனிப்பட்ட உரிமை. நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை குடியரசுத்தலைவரின் உரை முன்னெடுத்துள்ளது. 25 கோடி மக்களை அரசு வறுமையின் பிடியில் இருந்து மீட்டெடுத்து இருக்கிறது. Job Alert: இளைஞர்களே ரெடியா? மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.. எங்கு? எப்போது? விபரம் உள்ளே.!

மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படும்:

இந்திய நாட்டுக்கும், நாட்டின் மக்களுக்கும் அரசு ஒருகாலமும் பொய்யான, நிறைவேற்ற இயலாத வாக்குறுதியை அளித்தது இல்லை. நிறைவேற்ற இயலாத வாக்குறுதியை வழங்கும் வழக்கமும் எங்களுக்கு இல்லை. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 4 கோடி வீடுகள் அரசின் சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது, தொடர்ந்து நிறைவேற்றப்படும். சாமானிய, நடுத்தர வர்க்க மக்களின் முன்னேற்றம் தொடர்பான திட்டத்தை அரசு அமல்படுத்துகிறது.

மக்களின் நிலையை அறிந்து அரசு செயல்படுகிறது:

இந்தியா முழுவதும் சுமார் 12 கோடி கழிவறைகளை மத்திய அரசு தனது ஆட்சிக்காலத்தில் கட்டி இருக்கிறது. ஆனால், சில அரசியல்வாதிகள் அலங்கார குளியல் கழிவறைகளை கட்டி வருகின்றனர். 12 கோடி மக்களுக்கு குழாய் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவைக்கு வெளியே போட்டோ காண்பித்து பேட்டி கொடுக்கும் நபர்களுக்கு, நாங்கள் ஏழை தொடர்பாக கூறுவதும், அரசின் நடவடிக்கையும் அலுப்பாகவே இருக்கும். நமது அரசு ஏழையின் நலனுக்கு தீவிர முயற்சிகளை மேற்கொள்கிறது. மழைக்காலத்தில் ஏழைகளின் வீடுகள் எப்படி இருக்கும் என்பதை பாஜக தலைமையிலான மத்திய அரசு நன்கு உணர்ந்து இருக்கிறது" என பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றும் காணொளி: