நவம்பர் 23, சென்னை (Chennai News): மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், சென்னை மாவட்டத்தில் 08.02.2025 சனிக்கிழமை காலை 8 மணிமுதல் மாலை 3 மணிவரை, மாதவரம் புனித அன்னான் கலை & அறிவியல் கல்லூரியில் (St. Anne's Arts Science College) மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமின் சிறப்பு அம்சங்களாக 200 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வாயிலாக, 20,000 க்கும் அதிகமான பணியிடங்கள் தமிழக அளவில் நிரப்படவுள்ளன. Sivagangai News: மதநல்லிணக்கத்தின் இலக்கணம் நாங்கள்.. கோவில் குடமுழுக்கு பண்டிகைக்கு சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமிய சொந்தங்கள்.!
சிறப்பம்சம் & கல்வித்தகுதி:
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் நிறுவனங்களில் இதனால் வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதலும் வழங்கப்படும். இலவசமாக திறன் மேம்பாடு பயிற்சிக்கான பதிவுகளும் வழங்கப்படும். குறைந்தபட்சம் 8ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளோமா, நர்சிங், பார்மசி, பொறியியல் உட்பட துறைகளில் பயின்றோர் நேர்காணலில் பங்கேற்று வேலைவாய்ப்புகளை பெறலாம். உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படும். வேலை உறுதி செய்யப்பட்டால், அங்கேயே வேலைக்கான அழைப்புச் சான்றிதழும் வழங்கப்படும்.
இணைய முன்பதிவு அவசியம்:
கூடுதல் விபரங்களுக்கு சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்புகொள்ளலாம். மேற்கூறிய வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர் https://forms.gle/qsZbxrrSn547L9ep7 என்ற பக்கத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இணையவழியில் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்து தெரிந்துகொள்ளலாம்.
சென்னை மாவட்டத்தில் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான அறிவிப்பு:
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், சென்னை#TNDIPR #TNMediahub #CMMKStalin #DyCMUdhay #TNGovt #PeoplesGovt #TNGovtSchemes #CMOTamilnadu #peoplecm #TamilNadu pic.twitter.com/1Fe8kXKdif
— TN DIPR (@TNDIPRNEWS) February 4, 2025