ஜூன் 21, ஸ்ரீ நகர் (Jammu Kashmir News): பத்தாவது சர்வதேச யோகா தினமானது, ஜூன் 21ஆம் தேதி ஆன இன்று உலக அளவில் சிறப்பிக்கப்படுகிறது. பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் முக்கிய நிகழ்ச்சியாகவும் இன்று யோகாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலையே பலரும் நேரடியாக யோகா மையங்களுக்கு சென்று யோகா செய்தனர். யோகாவின் நன்மைகள் குறித்து உலகளவில் உணர்த்தும் பொருட்டு, 10 ஆண்டுகளுக்கு முன்பு உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை யோகாவை சர்வதேச அளவில் அங்கீகரித்து, உலக நாடுகள் அதனை பின்பற்றி கொண்டாடவும் ஏற்பாடுகள் செய்திருந்தது. இன்று ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீ நகரில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்தவர்களுடன் யோகா செய்தார். IND Vs AFG Highlights: 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியடைந்த இந்தியா; ஆப்கானிஸ்தானை சிதறவைத்த சூப்பர் 8 ஆட்டம்.!
வாழ்த்துக்களையும் தெரிவித்த பிரதமர்:
அதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், "சர்வதேச யோகா தினம் 177 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு புதிய சாதனையை படைத்திருக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் யோகா தினம் சர்வதேச அளவில் சிறப்பிக்கப்படுகிறது. உலகில் உள்ள ஒவ்வொரு மூலையிலும் யோகாசனம் செய்து உடலை கட்டுக்கோப்புடன் வைத்துள்ள மக்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். யோகா மூலமாக நாம் அடையும் ஆற்றல் ஸ்ரீநகரில் என்னால் உணர முடிகிறது. யோகா என்பது இயற்கையாக வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறும் போது, அது ஒவ்வொரு கணமும் பயனடையும்" என கூறினார்.
பிரதமரின் மோடியின் பேச்சு:
#WATCH | Srinagar, J&K: On International Day of Yoga, PM Narendra Modi says, "We can feel the energy in Srinagar, that we gain through Yoga. I extend greetings to people of the country and people performing Yoga in every corner of the world on Yoga Day. International Yoga Day has… pic.twitter.com/N3sVDnF8XC
— ANI (@ANI) June 21, 2024
யோகாசனத்தில் பிரதமர் நரேந்திர மோடி:
#WATCH | Prime Minister Narendra Modi greets participants of the Yoga session at Sher-i-Kashmir International Conference Centre (SKICC) in Srinagar in J&K; also clicks a selfie with them.
He led the Yoga session here this morning. pic.twitter.com/QKDge0fzih
— ANI (@ANI) June 21, 2024