மே 23, புதுடெல்லி (New Delhi): மத்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) கடந்த சில நாட்களுக்கு முன்னதாக புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வெளியிட்டது. வங்கிகளில் இருந்து இனி ரூ.2000 நோட்டுகள் (Rs. 2,000 Currency Note) புழக்கத்திற்கு செல்லக்கூடாது, அதனை வைத்துள்ள மக்கள் வங்கிகளில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக ரூ.20,000 வரையிலும் பணத்தை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனையடுத்து, வங்கிகளில் (Bank) கூடுதலாக பணம் செலுத்தும் மையங்கள் திறக்கப்பட்டு ரூ.2000 பணத்தை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதனிடையே, சில வங்கிகளில் பணத்தை மாற்றம் செய்ய ஆவணங்கள் கேட்கப்படுவதாகவும், மக்கள் அவதிப்படுவதாகவும் பல்வேறு செய்திகள் வெளியாகின. Bangalore Rain Death: மழைநீர் கால்வாயில் அலட்சியம்; தண்ணீரின் வேகத்தை பார்க்க சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சோகம்.!
இதனால் வங்கிகளில் மக்கள் பணத்தை எளிதில் மாற்றிக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இனி வங்கியில் ரூ.2000 நோட்டுகளை மாற்ற ஆதார் உட்பட பிற ஆவணங்கள் தேவை இல்லை என அறிவித்துள்ளது.
அதேபோல, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.2000 பணத்தை மாற்றுவதற்கு எந்த ஒரு படிவத்தையும் நிரப்ப தேவையில்லை என்பதை அனைத்து வங்கிகளும் கடைபிடிக்குமாறு பஞ்சாப் நேஷனல் வங்கி தலைமை தனது கிளைகளை கேட்டுக்கொண்டுள்ளது. ரூ.2000 பணத்தை மாற்ற இறுதி நாள் செப்டம்பர் மாதம் 30ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.