
மார்ச் 20, நாக்பூர் (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் (Nagpur) உள்ள சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டுமென ஒருதரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அப்பகுதியில் வன்முறை வெடித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மார்ச் 17ஆம் தேதி நாக்பூரில் நடந்த இந்த வன்முறை சம்பவங்களுக்குப் பிறகு, நேற்று (மார்ச் 19) நாக்பூரில் அமைதியான சூழல் நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கணவரை கள்ளக்காதலனுடன் கொன்று, உடலை 18 துண்டாக வெட்டிய மனைவி.. சிமெண்ட் ஊற்றி சமாதி கட்டிய பயங்கரம்.!
33 காவலர்கள் படுகாயம்:
கடந்த மார்ச் 17ஆம் தேதி காலை விஎச்பி மற்றும் பஜ்ரங் தளம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இரு சமூகங்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது. அன்றிரவு இரண்டு மணி வரை தொடர்ந்த சூழலில், வன்முறை சம்பவங்களில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பல வீடுகளும் ஒரு மருத்துவமனையும் சேதமடைந்தன. கற்கள் மற்றும் பிற ஆயுதங்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 33 காவலர்கள் படுகாயமடைந்தனர்.
முக்கிய புள்ளி கைது:
அங்கு பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், இந்த கலவரத்தை தூண்ட முக்கிய புள்ளியாக செயல்பட்ட, பஹீம் கானை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். குற்றம்சாட்டப்பட்ட இவரை மார்ச் 21ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கில், பஹீம் கானுடன் சேர்ந்து 51 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.