
மார்ச் 19, மீரட் (Uttar Pradesh News): உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் (Meerut) பகுதியில் வசித்து வருபவர் சௌரப் ராஜ்புத். இவரின் மனைவி முஸ்கான் ரஸ்தோகி. தம்பதிகள் இருவரும் கடந்த 2019ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் ஆவார்கள். இருவரும் வெவ்வேறு மாதமாக இருந்தாலும், சௌரப் - முஸ்கான் காதலின் உறுதித்தன்மையை கண்ட பெற்றோர், இருவருக்கும் திருமணம் செய்து வந்தனர். திருமணத்துக்கு பின்னர் தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் தற்போது 6 வயதுடைய குழந்தை இருக்கிறது. திருமணத்துக்கு முன்பு கடற்படை அதிகாரியாக பணியாற்றி வந்த சௌரப், காதல் மனைவியுடன் இருக்க எண்ணி வேலைகளையும் துறந்து வந்துள்ளார். தற்போது பணிசூழல் காரணமாக இங்கிலாந்து சென்று வேலை பார்த்து வருபவர், சமீபத்தில் சொந்த ஊர் வந்திருந்தார். Wife Killed by Husband: நூடுல்ஸ் சாப்பிட மறுத்த மனைவி கழுத்தை நெரித்துக்கொலை; 20 நிமிடங்களாக பரிதவித்த உயிர்.. அதிரவைக்கும் சம்பவம்.!
கள்ளக்காதல் ஜோடி கைது:
இதனிடையே, சொந்த ஊர் வந்தவர் சில நாட்களாக மாயமாகி இருக்கிறார். இதுகுறித்து அவரின் மனைவியிடம் கேட்டபோது, கணவர் வெளியே சென்று இருக்கிறார் என கூறி சமாளித்து வந்துள்ளார். பின் சௌரப் மாயமாகிவிட்டதாகவும், அவரை கண்டறிந்து தரவேண்டும் எனவும் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடந்தது. அப்போது, அதிர்வலையை ஏற்படுத்தும் தகவல் ஒன்று வெளியானது. அதாவது, முஸ்கான், அவரின் கள்ளக்காதலர் சாஹில் சுக்லா ஆகியோர் சௌரப்பை கொலை செய்து, 18 துண்டுகளாக உடலை வெட்டி சிமெண்ட் பையில் அடைத்து வைத்தது தெரியவந்தது. டிரம்மில் உடலை போட்டு, அதில் சிமெண்டை கரைத்து ஊற்றி உடல் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அதிகாரிகள் முஸ்கான் மற்றும் சுக்லா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, இருவருக்கும் இடையேயான கள்ளக்காதல் உறவுக்கு, சௌரப் ராஜ்புத் இடையூறாக இருப்பார் என எண்ணி கொலை நடந்தது அம்பலமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய அதிர்வலையை உண்டாக்கி இருக்கிறது. காதல் மனைவிக்காக கடற்படை வேலையை இழந்தவர், இறுதியில் மனைவியின் கள்ளக்காதலால் உயிரை இழந்துள்ளார்.