Crime Scene File Pic (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 10, பெலகாவி (Karnataka News): கர்நாடக மாநிலம், பெலகாவி (Belagavi) நகரின் ராமதீர்த்த நகரில் வசித்தவர் அமித் (வயது 34). இவரது மனைவி ஆஷா (வயது 30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அமித் டிவி பழுதுபார்க்கும் வேலை செய்து வந்துள்ளார். சரியாக பணிக்கு செல்லாமல், குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர், தினமும் போதையில் வீட்டுக்கு வந்து, தனது மனைவி மற்றும் குழந்தைகளை சித்ரவதை செய்துள்ளார்.  Accident Video: ராங் ரூட்டில் அதிவேக பயணம்.. கார் ஓட்டுனரால் நேர்ந்த பயங்கரம்.. பதறவைக்கும் காட்சிகள்.!

குடிபோதையில் தகராறு:

கடந்த ஒரு வாரமாக கணவருடைய தொந்தரவு மிக அதிகமாக இருந்தது. இவரது செயலால் கோபமடைந்த வீட்டு உரிமையாளர், வீட்டை காலி செய்யும்படி கட்டாயப்படுத்தினார். இந்நிலையில், நேற்று முன்தினம் (பிப்ரவரி 08) காலை, அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வந்த அமித், மனைவியுடன் தகராறு செய்தார். பின்னர், வீட்டில் இருந்த பொருட்களை வெளியே வீசினார். ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

கணவர் கொடூர கொலை:

இதனால், ஆத்திரமடைந்த அவரது மனைவி, கூரான ஆயுதத்தால் கணவரை குத்திக் கொலை (Murder) செய்துவிட்டு, வீட்டை வெளிப்புறமாக பூட்டி கொண்டு 2 குழந்தைகளை அழைத்து கொண்டு தப்பி சென்றார். இவர்களின் வீட்டில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து கிடந்ததை கவனித்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக உள்ளே எட்டி பார்த்த போது, அவர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தது தெரியவந்தது. உடனே இதுகுறித்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், விரைந்து வந்த காவல்துறையினர், பூட்டை உடைத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவாக இருந்த அவரது மனைவி ஆஷாவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.