பிப்ரவரி 05, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், பெங்களூருவில் (Bengaluru) உள்ள மடிவாலா காவல்துறையினர் நீண்டகால குற்றச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பஞ்சாக்ஷரி சுவாமி, மகாராஷ்டிராவின் சோலாப்பூரைச் சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருந்தபோதிலும், பல பெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். கடந்த 2003ஆம் ஆண்டு மைனராக இருந்தபோது, சுவாமி தனது திருட்டுகளைத் தொடங்கினார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து 2009ஆம் ஆண்டு தொழில்முறை திருடனாக மாறிய சுவாமி, தனது குற்றங்கள் மூலம் கோடிக்கணக்கான சொத்துக்களைக் குவித்துள்ளார். Professor Married Student: கல்லூரி வளாகத்தில் நடந்த டும்.. டும்..! மாணவரை மணந்த பேராசிரியை..!
பிரபல நடிகையுடன் தொடர்பு:
இதனைத்தொடர்ந்து, 2014-15ஆம் ஆண்டில், ஒரு பிரபல நடிகையுடன் தொடர்பு கொண்டு அவருடன் காதலில் இருந்துள்ளார். விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர் நடிகைக்காக கோடிக்கணக்கில் செலவு செய்ததாகவும், கொல்கத்தாவில் ரூ. 3 கோடி மதிப்புள்ள வீட்டைக் கட்டி, ரூ. 22 லட்சம் மதிப்புள்ள மீன் தொட்டியையும் பரிசாக அளித்திருப்பாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், 2016ஆம் ஆண்டு, குஜராத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சுவாமிக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அகமதாபாத்தில் உள்ள சபர்மதி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அவர் மீண்டும் திருட்டு தொழிலில் ஈடுபட்டார். பின்னர், இதே போன்ற குற்றங்களுக்காக மகாராஷ்டிரா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, 2024-யில் விடுவிக்கப்பட்டார்.
விசாரணையில் வெளிவந்த உண்மை:
தனது இருப்பிடத்தை பெங்களூருக்கு மாற்றியதும், மீண்டும் தொடர் வீட்டு திருட்டுகளில் ஈடுபட்டுள்ளார். ஜனவரி 09ஆம் தேதி பெங்களூருவின் மடிவாலா சந்தை பகுதியில் ஒரு வீட்டில் திருடிக்கொண்டிருந்த போது, காவல்துறையினர் சுவாமியை கைது செய்தனர். விசாரணையில், அவர் தனது கூட்டாளியுடன் பெங்களூரில் குற்றங்களைச் செய்ததாக ஒப்புக்கொண்டார். திருடப்பட்ட தங்கத்தை உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்ற அவர் பயன்படுத்திய உபகரணங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருடப்பட்ட நகைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட அனைத்து தங்கம் மற்றும் வெள்ளி பிஸ்கட்டுகளையும் மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் உள்ள தனது வீட்டில் சேமித்து வைத்ததாக கூறியுள்ளார். அதிகாரிகள் 181 கிராம் தங்க பிஸ்கட்டுகள், 333 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் நகைகளை உருக்க பயன்படுத்தப்பட்ட நெருப்பு துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர். ஒவ்வொரு முறையும் திருட்டிற்கு பிறகு, சந்தேகத்தைத் தவிர்க்க அவர் சாலையில் தனது உடைகளை மாற்றுவார் என்பதையும் புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.