Odisha Shocker: 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. உறவினர் கைது..!

ஒடிசாவில் 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Odisha Shocker: 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. உறவினர் கைது..!
Sexual Abuse | Rape File Pic (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 28, புவனேஸ்வர் (Odisha News): ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டத்தில் (Ganjam) பட்டாபூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 4 வயது சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, சிறுமி அவரது மாமாவின் கிராமத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். கைவைத்த இளைஞர்.. கன்னம் பழுக்க பளார் விட்டு அதிரடி காட்டிய இளம்பெண்.. சிங்கப்பெண்ணுக்கு குவியும் பாராட்டு.!

சிறுமி பாலியல் பலாத்காரம்:

இதுகுறித்த விசாரணையில், சிறுமியின் மாமா கலியா நஹக் (வயது 27), நேற்று முன்தினம் (ஏப்ரல் 26) மதுபோதையில் இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த சிறுமியிடம் சிப்ஸ், மிட்டாய் கொடுத்து அருகில் உள்ள கட்டிடத்தில் பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்துள்ளார். பின்பு அவரை கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3

 

(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 11:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).