Union Minister Nirmala Sitaraman | Gold (Photo Credit: @ANI X / Pixabay)

ஜூலை 23, புதுடெல்லி (New Delhi): பட்ஜெட் 2024 - 2025 அறிவிப்பில் இந்தியாவே எதிர்பார்த்த பல அதிரடி அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இந்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த பட்ஜெட்டில், "3 புற்றுநோய் மருந்து மற்றும் மருத்துவ உபகரணம் மீதான வரிகள் நீக்கப்படுகிறது. தொழில் தொடங்குவதை எளிதாக மாற்ற ஜன்விஷிவாஸ் 2.0 திட்டம் மசோதா அறிமுகம் செய்யப்படும். Union Budget 2024: வேளாண்துறைக்கு ரூ.1.5 இலட்சம் கோடி.. விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம்.. வெளியான மத்திய பட்ஜெட் 2024..!

செல்போன் விலை குறையும்:

செல்போன், சார்ஜர் மீதான உற்பத்தி வரி 15% குறைக்கப்படும். இதனால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும். மேலும், செல்போன் உதிரி பாகங்களின் விலையும் குறையும். நடப்பு நிதியாண்டுக்கான மொத்த வருவாய் ரூ.32.07 இலட்சம் கோடியாக இருக்கும். தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி சுங்கவரி 6% குறைக்கப்படும். பிளாட்டினம் மீதான சுங்கவரி 6.4% ஆக நிர்ணயம் செய்யப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தங்கம் மற்றும் வெள்ளி மீது 15% வரி விதிக்கப்பட்ட நிலையில், தற்போது 6% வரி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில்,, சுற்றுசூழலை பாதிக்கும் வகையிலான பிளாஸ்டிக் மீதான வரி 25 % அதிகரித்துள்ளது.