அக்டோபர் 08, புதுடெல்லி (New Delhi): ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தல்கள் விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்தன. அக்.08ம் தேதியான இன்று இரண்டு மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. பாஜக - காங்கிரஸ் (BJP Vs Congress) கட்சிகளிடையே கடும் போட்டித்தன்மையை ஏற்படுத்திய இரண்டு மாநில தேர்தலிலும், மக்கள் அளித்துள்ள வாக்குகள் யார் பக்கம் என்பதை எதிர்பார்த்து இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களும் காத்திருக்கின்றன.
10 ஆண்டுகள் கழித்து காஷ்மீரில் தேர்தல்:
ஜம்மு காஷ்மீரை (Jammu Kashmir Election Results 2024) பொறுத்தமட்டில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர், 10 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக தேர்தல் நடைபெறுகிறது. அங்கு பயங்கரவாத செயல்கள் திடீரென தலைதூக்கி இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், இந்திய இராணுவம் மற்றும் மாநில காவல்துறை உதவியுடன் தேர்தல்கள் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களில் தலா 90 தொகுதிகள் இருக்கும் நிலையில், காஷ்மீரில் வெவ்வேறு கட்டங்களாகப் பிரித்து தேர்தல் நடத்தப்பட்டது. Wolf Attack: குழந்தையை கடிக்க முயன்ற ஓநாய்.. சுற்றி வளைத்து அடித்தே கொன்ற கிராம மக்கள்..!
இன்று முடிவுகள்:
இன்று தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியாகும் நிலையில், ஆட்சி யார் வசம்? என்ற கேள்விக்கு மதியத்திற்கு மேல் விடை தெரிந்துவிடும் என்பதால், ஒட்டுமொத்த இந்தியாவும் இரண்டு மாநிலங்களின் தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஹரியானா (Haryana Assembly Poll Results 2024) மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளில், 93 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 30 மத்திய ரிசர்வ் போலீசார் படை உட்பட 12000 க்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு பணியில் இராணுவம்:
ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரையில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக்டோபர் 01 ஆகிய தேதிகளில் வெவ்வேறு கட்டமாக 90 தொகுதிகளுக்கும் பிரித்து தேர்தல் நடத்தப்பட்டது. அம்மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களில் 63.88% நபர்கள் தங்களின் வாக்குகளை செலுத்தி இருந்தனர். பாதுகாப்பு பணியில் இந்திய இராணுவம், மத்திய ரிசர்வ் படை, மாநில காவலதுறையினர் உட்பட பல்லாயிரக்கணக்கான அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.