Wolf (Photo Credit: Pixabay)

அக்டோபர் 07, பக்ரைச் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், பக்ரைச் (Bahraich) மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக ஓநாய்கள் (Wolf) அட்டகாசம் நீடித்து வருகின்றது. அந்த மாவட்டத்தில் இருந்த 50 கிராமங்களில் 6 ஓநாய்கள் சுற்றி வந்தன. ஓநாய்கள் தாக்கியதில் 7 சிறுவர்கள் உட்பட 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. பெண் ஆசிரியையின் அந்தரங்க வீடியோ லீக்; அந்த விசயத்திற்கு சம்மதிக்காததால் 15 வயது சிறார் கும்பல் அதிர்ச்சி செயல்.!

இதுகுறித்த தகவலின்பேரில், வனத்துறையினர் ஓநாய்களை பிடிக்க தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் அவர்கள் 5 ஓநாய்களை பிடித்த நிலையில் ஒரு ஓநாய் மட்டும் வனத்துறையினரிடம் சிக்காமல் இருந்தது. இந்நிலையில், எஞ்சிய ஒரு ஓநாய் நேற்று முன்தினம் இரவு (அக்டோபர் 05) மஹசி வட்டத்தில் உள்ள தமாச்புா் கிராமத்தில் ஒரு வீட்டிற்குள் புகுந்தது.

அங்கு தாயின் அருகில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை ஓநாய் தூக்க முயன்றது. அப்போது, குழந்தையின் தாய் விழித்து அலறியடித்து, அங்கிருந்த ஆட்டுக் குட்டியை ஓநாய் துாக்கிச் சென்றது. உடனே, ஓநாயை சுற்றி வளைத்த கிராம மக்கள், ஓநாயை கண்மூடித்தனமாக தாக்கினர். இதில், அந்த ஓநாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், ஓநாயை மீட்டு சென்றனர்.