ஏப்ரல் 07, உருளையன்பேட்டை (Pondicherry News): புதுச்சேரி மாநிலத்தில் உள்ள உருளையன்பேட்டை (Pondicherry), ராஜா நகரில் வசித்து வருபவர் ரஞ்சித் குமார் (வயது 40). இவர் கூலித்தொழிலாளி ஆவார். அங்குள்ள நவீன கார்டன் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). ரஞ்சித் குமாரிடம் கண்ணன் ரூ.45 ஆயிரம் கடன் வாங்கி இருக்கிறார்.

பல ஆண்டுகள் ஆகியும் கடனை திரும்பி செலுத்தாத கண்ணன், தவணை கேட்டு இழுத்தடித்து வந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக ரஞ்சித் குமார் கண்ணனை நேரில் சந்திக்கும்போதெல்லாம் பணம் கேட்டு வந்துள்ளார். Ambulance Workers: பிறந்து 23 நாட்களேயான குழந்தையின் உயிரை சி.பி.ஆர் செய்து நொடியில் காப்பாற்றிய அவசர ஊர்தி ஊழியர்கள்..!

நேற்று இரவு நேரத்தில் கண்ணனின் வீட்டிற்கு சென்ற ரஞ்சித் குமார், தான் கொடுத்த பணத்தை கேட்டு இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இந்த தகராறின் போது ஆத்திரமடைந்த கண்ணன், வீட்டருகே இருந்த கல்லை எடுத்து ரஞ்சித் குமாரின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தில் மயங்கி விழுந்த ரஞ்சித் குமார் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த உருளையன்பேட்டை காவல் துறையினர், ரஞ்சித் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.