ஜூலை 25, புதுடெல்லி (New Delhi News): கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி "பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா" (Pradhan Mantri Matru Vandana Yojana) திட்டத்தை இந்தியா முழுவதும் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் நிதியுதவி வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறும் தகவல்களை பின்வருமாறு பார்க்கலாம். Aadi Pooram 2025: அம்மனின் அருள் தரும் ஆடிப் பூரம்.. தேதி, நல்ல நேரம், வழிபாட்டு முறைகள், பலன்கள்.. விபரம் இதோ..!
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் :
பெண் கருவுற்றது முதல் குழந்தை பிறந்த பின்னர் வரை சுமார் மூன்று தவணைகளாக நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதியுதவியை பெறுபவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். கர்ப்பிணி பெண்ணின் வயது 19க்கு மேல் இருப்பது கட்டாயமாகும். இந்திய அரசின் இந்த திட்டமானது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையால் நிர்வகிக்கப்படுகிறது.
தேவையான ஆவணங்கள் :
- ஆதார் அட்டை
- குழந்தை பிறப்புச் சான்றிதழ்
- முகவரி சான்றிதழ்
- வருமானச் சான்றிதழ்
- ஜாதி சான்றிதழ்
- பான் கார்டு
- பேங்க் பாஸ்புக்
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
விண்ணப்பிப்பது எப்படி ?
இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற https://pmmvy.wcd.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். தங்களது செல்போன் நம்பரை கொடுத்து விண்ணப்ப படிவத்தில் கேட்கப்படும் தகவல்களை நிரப்பி ஆன்லைன் வாயிலாக அதனை சமர்ப்பிக்க வேண்டும்.
நேரில் சென்று இந்த விண்ணப்பம் பெற விரும்புவோர் அருகில் உள்ள அங்கன்வாடி மற்றும் சுகாதார மையங்களுக்கு சென்று இது குறித்த விண்ணப்பத்தை கேட்டு பெறலாம். படிவத்தை நிரப்பிய பின் தேவையான ஆவணங்கள் மற்றும் வங்கிக்கணக்கு விவரங்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த உதவித்தொகை நேரடியாக பெண்ணின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.8 லட்சத்திற்கும் கீழ் இருக்கும் பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பலன் பெறலாம்.